திமுக சட்டத்துறை செயலாளர் வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ எம் பி அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தேர்தல் ஆணையம் மூலம் நடத்தப்பட்ட பயிற்சி முறையானதாக இல்லை. நேற்று பல இடங்களில் வாக்காளர்களுக்கு விண்ணப்பங்களை தேர்தல் பணியாளர்கள் முறையாக வழங்கப்படவில்லை என்று கூறினார்.
எஸ். ஐ. ஆர் மூலம் தகுதியான ஒரு வாக்காளர் இழக்கக்கூடாது இதற்காக தான் திமுக போராடி வருகிறது என்று கூறியுள்ளார். பீகாரில் நடத்திய எஸ்.ஐ.ஆர் விட தற்போது தமிழக உட்பட 12 மாநிலங்களில் கொண்டு வந்துள்ள எஸ். ஐ. ஆர் அதிக குழப்பத்தை உண்டாக்கியுள்ளது என்று கூறினார்.

எஸ் ஐ ஆர் சிறப்பு தீவிர வாக்காளர் சீராய்வு ஏற்கனவே பிஹார் நடத்தப்பட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு வந்த பின்னரும் 65 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டது என்றும் நேற்றிலிருந்து துவங்கப்பட்ட எஸ். ஐ. ஆர் பணி இங்கு பல குழப்பத்தை உருவாக்கும் என்று குறிப்பிட்ட நிலையில், இந்தியா கூட்டணி தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளையும் இணைத்து இதன் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது என்றும் விளக்கம் அளித்தார்.
இதையும் படிங்க: கூட்டு பாலியல் வன்கொடுமை! குற்றவாளிகள் பிடிபட்டது எப்படி? காவல் ஆணையர் விளக்கம்...!
நேற்றைய தினம் துவங்கப்பட்ட எஸ் ஐ ஆர் பணிகள் சரிவர நடைபெறவில்லை என்றும் கணக்கீடு விண்ணப்பத்தை கொடுத்து திரும்ப பெறும் காலம் நடைமுறைக்கு உகந்தது இல்லை எனவும் கிறிஸ்மஸ் மற்றும் பொங்கல் பண்டிகை வருகிறது., இந்த காலத்தில் அரசு ஊழியர்கள் வாக்காளர்கள் களத்தில் இருந்து இந்த பணிகளை செய்ய முடியாது எனவும் தெரிவித்தார். நாங்கள் களத்தில் தயாராக இருக்கிறோம் என்று கூறிய அவர், எந்த ஒரு தகுதியான வாக்காளரும் நீக்கப்படக் கூடாது., எந்த ஒரு தகுதி இல்லாத வாக்காளரும் சேர்க்கப்பட கூடாது என்பதுதான் எங்களுடைய நோக்கம் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: விஜயை அரெஸ்ட் பண்ணாததுக்கு காரணமே இதுதான்! ஆதவ் எப்படி தப்பிச்சாரு? சீமான் பரபரப்பு பேட்டி...!