கோவை ஏர்போர்ட் அருகே மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் சுட்டுபிடிக்கப்பட்டது குறித்து காவல் ஆணையர் விளக்கம் அளித்தார். அவர் பேசியதாவது, கார் கண்ணாடியை உடைத்து நண்பரை தாக்கிவிட்டு மாணவியை வன்கொடுமை செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இரண்டு பேர் ஏற்கனவே ஒரு வழக்கில் தற்போது ஜாமினில் வெளிவந்துள்ளனர். குற்றவாளிகள் கொண்டு வந்த இருசக்கர வாகனம் திருட்டு வாகனம். இரு சக்கர வாகனம் திருடு போனது தொடர்பாக ஏற்கனவே வழக்கு பதிவாகியுள்ளது.
பிடிபட்டுள்ள மூன்று பேரும் கூலிப்படையுடன் தொடர்புடைய நபர்களாக தெரியவில்லை., விசாரணைக்கு பின் தெரிய வர வாய்ப்பு. பாதிக்கப்பட்ட இளம்பெண் நல்ல உடல் நலத்துடன் உள்ளார். அவருக்கு மனநல கவுன்சிலின் தரப்படுகிறது. நள்ளிரவு 10.30 மணி அளவில் துப்பாக்கி சூடு நடத்தி குற்றவாளிகள் பிடிக்கப்பட்டனர். ரகசிய தகவலின் அடிப்படையில் மூன்று பேரும் பதுங்கி இருந்ததை கண்டுபிடித்தோம். கோவையில் 300 சிசிடிவிகளை ஆய்வு செய்து குற்றவாளிகள் மூவரையும் கைது செய்துள்ளோம்.

கோவையில் பல இடங்களில் வீடுகளில் உள்ள சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை., பொதுமக்களும் அதனை கவனிக்க வேண்டும். சுட்டுபிடிக்கப்பட்ட மூன்று பேர் மீதும் பல்வேறு கொலை திருட்டு வழக்குகள் உள்ளன. சம்பவ இடத்தில் மது அருந்தி கொண்டிருந்த மூன்று பேரும் கல்லைகுண்டு கார் கண்ணாடியை தாக்கி இளம் பெண்ணை தூக்கிச் சென்றனர். கைகளில் வைத்திருந்த அரிவாளை கொண்டு ஆண் நண்பரை தாக்கி இளம்பெண்ணை தூக்கிச் சென்ற பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதையும் படிங்க: விஜயை அரெஸ்ட் பண்ணாததுக்கு காரணமே இதுதான்! ஆதவ் எப்படி தப்பிச்சாரு? சீமான் பரபரப்பு பேட்டி...!
பிடிபட்ட மூவரில் காளீஸ்வரன், கருப்பசாமி இருவரும் பிணையில் வெளிவந்துள்ள குற்றவாளிகள். சாவியுடன் சாலையில் நின்றிருந்த இருசக்கர வாகனத்தை திருடிய நிலையில் அதன் மூலம் மூன்று பேரும் சிக்கி உள்ளனர். பிருந்தாவன் நகர் மெயின் சாலை வரை போலீசார் ரோந்து சென்றுள்ளனர். அதன் பின்னர் தான் சம்பவம் நடந்துள்ளது. மூன்று பேர் மீதும் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.
இதையும் படிங்க: பார்த்தாலே மனசு வலிக்குது... ஒரு மழைக்கே இந்த கதி..! சௌமியா அன்புமணி வேதனை...!