கோவையில் நாம் தமிழர் கட்சியினர் உண்டியலில் கியூஆர் கோடு ஒட்டி திரள்நிதி வசூலித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.
கோவை கொடிசியா திடலில் நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழினப் பேரெழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது. இந்தப் பொதுக் கூட்டத்தில் கட்சி தொண்டர்களிடம் திரள்நிதி திரட்டப்பட்டது. இதற்காக தனித்தனியாக உண்டியல்கள் தயார் செய்யப்பட்டன. கட்சி நிர்வாகிகள் தொண்டர்களின் இருக்கைக்கு சென்று திரள்நிதி வசூல் செய்தனர்.

இது ஒரு புறம் இருக்க, உண்டியலைச் சுற்றிலும் கியூஆர் கோர்டு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இன்று பலரும் கையில் பணம் வைத்துக்கொள்வதில்லை. ஜிபே, பேடிஎம் மூலம் பணத்தைச் செலுத்துகின்றனர். எனவே, கியூஆர் கோட் மூலம் வசூலிக்க நாதகவினர் இந்த ஏற்பாட்டைச் செய்திருந்தனர்.
இதை செல்போனில் ஸ்கேன் செய்த தொண்டர்கள் திரள்நிதியை செலுத்தினர். உண்டியலில் கியூஆர் கோடு ஸ்டிக்கர்கள் ஒட்டி திரள்நிதி வசூல் செய்ததை அக்கட்சியை சேர்ந்த சிலர் செல்போனில் வீடியோவாகவும், போட்டோவாகவும் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி சுற்றிக் கொண்டிருக்கின்றன.
இதையும் படிங்க: அரசியல் இலாபமீட்ட முற்படுவது வெட்கக் கேடானது... திமுக & அதிமுக-வை சரமாரியாக விளாசிய சீமான்!!