தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை 11 மணிக்குத் தொடங்கியுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று காரைக்குடி தேர்தல் அலுவலகத்தில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்கிறார். காரைக்குடி தொகுதியில் சீமான் நேரடியாகக் களம் காண்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
முன்னதாக இன்று காலை காரைக்குடி கண்டனூர் செக்போஸ்டில் தேர்தல் பறக்கும் படையினர் சீமானின் காரைச் சோதனையிட்டபோது, அவர் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இன்றைய (மார்ச் 30) பிரசாரப் பயணத் திட்டம்:
வேட்புமனுத் தாக்கலைத் தொடர்ந்து, சீமான் அவர்கள் காரைக்குடி தொகுதியின் பல்வேறு பகுதிகளில் தனது முதற்கட்ட வாகனப் பரப்புரையைத் தொடங்குகிறார்:
இதையும் படிங்க: ஸ்டாலின், இபிஎஸ் காரையும் செக் பண்ணுங்க! தேர்தல் அதிகாரிகளுடன் சீமான் வாக்குவாதம்!
வேட்புமனு தாக்கல்: காரைக்குடி தேர்தல் அலுவலகத்தில் இன்று காலை தனது அதிகாரப்பூர்வ மனுவைச் சமர்ப்பிக்கிறார்.

வாகனப் பரப்புரை: மனுத்தாக்கலுக்குப் பிறகு புளியால், முப்பையூர் மற்றும் சறுகிணி ஆகிய கிராமப் பகுதிகளில் திறந்த வாகனத்தில் சென்று ஆதரவு திரட்டுகிறார்.
மக்கள் சந்திப்பு: இந்தப் பிரசாரத்தின் போது விவசாயிகளின் நலன், நீர் மேலாண்மை மற்றும் காவிரி விவகாரங்கள் குறித்து அவர் உரையாற்றத் திட்டமிட்டுள்ளார்.
சென்னையில் இன்று தவெக தலைவர் விஜய் தனது பிரசாரத்தைத் தொடங்கியுள்ள அதே வேளையில், தென் மாவட்டங்களில் சீமான் தனது பிரசாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளார். "எடப்பாடி பழனிசாமி மற்றும் மு.க. ஸ்டாலின் ஆகியோரின் வாகனங்களையும் இதேபோல் சோதனையிட வேண்டும்" என்று சீமான் இன்று காலை அதிகாரிகளிடம் ஆவேசமாக முழங்கியது, அவரது பிரசாரத்தின் தொடக்கத்திலேயே ஒரு சூட்டை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே வி.கே. சசிகலா தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ள சூழலில், காரைக்குடி தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவுமா அல்லது மற்ற கட்சிகள் சீமானுக்குக் கடும் சவாலை அளிக்குமா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.
இதையும் படிங்க: குடிப்பவர்கள் வாக்கு எங்களுக்கு வேண்டாம்.. குடிமக்களின் வாக்குதான் தேவை..!! சீமான் தெறி ஸ்பீச்..!!