நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகத்தை பொறுத்தவரை 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறார். 117 ஆண்கள், 117 பெண்கள் என சரி சமமாக ஒதுக்கி களம் காண செய்கிறார். அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து சீமான் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையில், புதுச்சேரியில் ஏப்ரல் 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில் புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஒருவரை ஆதரித்து சீமான் பரப்புரை மேற்கொண்டு இருந்தார். இந்த நிகழ்வின் போது தமிழக வெற்றி கழகத்தின் கோஷமிட்ட இளைஞர் ஒருவரை நாம் தமிழர் கட்சியின் தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புதுச்சேரியில் நாம் தமிழர் வேட்பாளர் ஒருவரை ஆதரித்து வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார். திறந்த வெளி வாகனத்தில் சீமான் வாக்கு சேகரித்து கொண்டிருந்த போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர் டிவிகே என கோஷமிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சீமான் டேய் இங்க வாடா… வந்து டீ வித்துட்டு போடா..! அவன தூக்கிட்டு வாங்கடா இங்க..! என்று ஆவேசம் அடைந்தார்.
இதையும் படிங்க: ஏன் என் வீட்ல ரெய்டு நடக்கலை?! பயப்படுற ஆளு மாதிரி தெரியுதா?! சேட்டை காட்டிருவியா நீ? சீமான் ஆவேசம்!
உடனே அந்த இளைஞரை துரத்தி சென்று நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இருசக்கர வாகனத்தில் இருந்து இழுத்து தாக்கம் முயன்றனர் அப்போது அருகில் இருந்த போலீசார் நாம் தமிழர் கட்சி தொண்டர்களிடமிருந்து அந்த இளைஞரை காப்பாற்றி அழைத்துச் சென்றனர். அப்போது சீமான், இந்த இளைஞரை தாக்கம் என்ற நாம் தமிழர் கட்சியினரிடம் தவெகவினர் தற்குறிகள் என்றும் நாம் அறிவார்ந்த பிள்ளைகள் எனவும் தெரிவித்தார். மிகுந்த ஆத்திரத்தில் இருந்த நாம் தமிழர் கட்சியினரை பிறகு சீமான் சமாதானப்படுத்தினார். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
இதையும் படிங்க: மழையிலும் அதிரடி பரப்புரை! அரியலூரில் நனைந்தபடியே வாக்கு சேகரித்த சீமான்!