கள்ளக்குறிச்சி அடுத்த கல்வராயன் மலையில் வயதான தம்பதி வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். கல்வராயன் மலையில் உள்ள பெருமானம் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி பொன்னம்மாள் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பகுதியில் பெருமானம் கிராமம் உள்ளது. மிக அமைதியான கிராமத்தில் 70 வயதான ராமசாமி என்ற முதியவர் 65 வயதான அவரது மனைவி பொன்னம்மாளுடன் வசித்து வந்தார். இருவரும் பெருமானம் கிராமத்தில் காட்டு கொட்டையில் தனியா வசித்து வந்துள்ளனர். இன்று காலை வீட்டில் தனியாக இருந்த முதியவர்கள் இருவரும் சரமாரியாக வெட்டிக்கொல்லப்பட்ட நிலையில் சடலமாக கண்டறியப்பட்டுள்ளனர்.
தகவல் அறிந்து கரியாலூர் போலீசார், உடல் முழுவதும் வெட்டுக் காயங்களுடன் இருந்த முதியவர்களின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கினர். ராமசாமி, பொன்னாம்மாள் உடைய பேத்தி மேகலா, அவரது கணவர் சதீஷ் இருவருக்கும் திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. மேகலாவுக்கும் சதீஷுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மேகலா தங்களோட தாத்தா பாட்டி வீட்டில் நீண்ட நாளா தங்கி வசித்து வருகிறார்.
இதையும் படிங்க: தகாத உறவு..! கள்ளக்காதலன் வெறியாட்டம்..! கை துண்டான பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!
இன்று காலை கரியாலூருக்கு வந்த சதீஷ், மேகலாவை தன்னுடன் அனுப்பி வைக்கும் படி அவரது தாத்தா பாட்டியிடம் கேட்டுள்ளார். மேலும் “புருஷன், பொண்டாட்டி சண்டையை பேசி சமாதானப்படுத்தி வைக்க மாட்டீங்களா?. உங்க பேத்தி வீட்டை விட்டு வந்து எவ்வளவு நாளாச்சு. இங்கேயே தங்அ வச்சியிடுக்கீங்களே” என முதிய தம்பதியிடம் ஆவேசத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதற்கு மேகலாவின் தாத்தா “பேத்தி வர விருப்பப்படவில்லை. அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்?” எனக்கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் தலைக்கேறிய சதீஷ் அரிவாளால் ராமசாமியையும், பொன்னம்மாளையும் சரமாரியாக வெட்டியுள்ளார். தற்போது போலீசார் சதீஷைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நேரத்தில் முதிய தம்பதி கொடூரமாக வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் கல்வரையான் மலையில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: காதலிக்க மறுத்த 17 வயது சிறுமி... கத்தியால் கழுத்தை அறுத்துவிட்டு தப்பிய முயன்ற இளைஞன் கைது...!