புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட பெரியார் நகரில் உள்ள காங்கிரஸ் கட்சி மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அக்கட்சி நிர்வாகிகளோடு ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். குறிப்பாக இதில் எஸ்.ஐ.ஆர் பணி குறித்து விவாதிக்கப்பட்டது.
இதன் பின்னர் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப. சிதம்பரம் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்து பேசகையில்: திமுக அரசு கூட்டணியில் இருக்கிறோம் அவர்களுடன் தேர்தல் உடன்பாடு தொகுதி பங்கீடு காக ஐந்து பேர் குழு காங்கிரஸ் தலைமை நியமித்துள்ளது. ஐந்து பேர் குழு திமுக தலைவரை சந்தித்திருக்கிறார்கள். அவர் நான் ஒரு கமிட்டி அமைப்பேன் அப்போது இரண்டு குழுக்களும் பேசிக்கலாம் என்று கூறியுள்ளார். இரண்டு குழுக்களும் பேசி அவர்கள் தலைவர்களுக்கு அனுப்பிய பிரிவு தலைவர்கள் பேசி முடிவெடுப்பார்கள்.
எஸ் ஐ ஆர் ஐ நாங்கள் எதிர்க்கவில்லை. ஒரு ஊரில் 13 பேர் உயிருடன் இருக்கிறார்கள் அவர்கள் விடுபட்டு இருக்கிறார்கள். இறந்தவர்களை விட்டு விடலாம். இரட்டை பதிவை விட்டு விடலாம். முகவரியே இல்லாமல் இருக்கிறார்கள். உங்களுக்கெல்லாம் முகவரி இல்லாதவர்களை எத்தனை பேரை தெரியும். 66 லட்சத்து 44 ஆயிரத்து 881 பேர் முகவரி இல்லாமல் இருக்கிறார்களா? எனக்கு முகவரி இல்லாதவர்களை யாரையும் தெரியாது. தூய்மை பணியாளர்கள் கூட ஏதோ ஒரு முகவரியில் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஒன்பது பேரில் ஒருவருக்கு முகவரியே கிடையாதா? இதைவிட ஒரு வேடிக்கையை நான் பார்த்ததே கிடையாது.
இதையும் படிங்க: “2வது முறையாக காந்தியை படுகொலை செய்துவிட்டார்கள்...” - மத்திய அரசை வெளுத்து வாங்கிய ப.சிதம்பரம்...!
இது மிகப்பெரிய மோசடி அதுவும் தமிழ்நாட்டில் இது பின்தங்கிய மாநிலம் இல்லை காட்டுப் பகுதி மாநிலம் அல்ல வனப் பகுதி மாநிலம் அல்ல மலைப்பகுதி மாநிலம் அல்ல. பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்ற மாநிலம். எட்டு கோடி பேரில் 66 லட்சத்து 44 ஆயிரம் பேர் முகவரி இல்லாமல் இருக்கிறார்கள் என்றால் யாராவது நம்புவார்களா?. இறந்தவர்களை ஏற்றுக்கொள்ளலாம் இரட்டை பதிவை ஏற்றுக் கொள்ளலாம் முகவரி இல்லாமல் இருக்கிறார்கள் என்று சொன்னால் எப்படி நம்புவது.
எஸ் ஐ ஆர் பணி செய்தது தமிழ்நாடு அரசு ஊழியர்கள் என்றாலும் அந்த பணி செய்யும் போது தேர்தல் ஆணையத்தின் ஊழியர்களாக இருப்பார்கள். எஸ் ஐ ஆர் பணி செய்பவர் தமிழ்நாடு அரசு ஊழியர்களாக இருந்து செய்ய மாட்டார்கள். அந்த நாளுக்கு அந்த நேரத்திற்கு அவர் தேர்தல் ஆணையத்தின் ஊழியர். தேர்தல் ஆணையம் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம் அவரை பதவியை விட்டு கூட நீக்கலாம். அதனால் அவர்களை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் என்று நினைக்க வேண்டாம்.
மாவட்ட ஆட்சியர் தற்போது இருக்கிறார் தேர்தல் அதிகாரியாக பணியாற்றும் போது அவரும் தமிழ்நாடு அரசு பணியாளர் அல்ல. ஒரு பக்கம் கிறிஸ்தவ மக்கள் மீது தாக்குதல் நடத்துவார்கள். ஒரு பக்கம் 11 ஆண்டுகள் கழித்து கிறிஸ்துமஸ் பண்டிகையில் பிரதமர் மோடி கலந்து கொள்வார். இது என்ன வேடிக்கை. நல்ல வேலை மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவரது காலத்தில் நடித்து நடிகர் திலகம் என்று பெயர் எடுத்தார். இந்த காலத்தில் நடிகர் திலகம் என்றால் அது பிரதமர் மோடி தான். அமித்ஷா பீகாரை போன்று தமிழ்நாட்டிலும் வெற்றி பெறுவோம் என்று தான் கூறுவர் நாங்கள் தோற்போம் என்றா கூறுவார்.
விஜய் பற்றி எல்லாம் தன்னிடம் கருத்து கேட்காதீர்கள். நாங்கள் எங்கள் தலைமையின் அறிவிப்பு படி திமுக கூட்டணியில் இருக்கின்றோம் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்த ஐந்து பேர் கொண்ட குழு அமைத்துள்ளது அந்த குழு பேசிய பிறகு அறிக்கை தந்த பிறகு இரு தலைவர்களும் பேசி முடிவெடுப்பார்கள் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: அப்பவே செஞ்சிருந்தா விஜய் ஹீரோ… அத விட்டுட்டு…! TVK அஜிதாவுக்கு குரல் கொடுத்த சரத்குமார்…!