சிந்து நதி நீரைத் தடுக்கும் விதமாக இந்தியா கட்டும் எந்த ஒரு கட்டமைப்பையும் பாகிஸ்தான் தாக்கி அழிக்கும் என அந்நாட்டின் ராணுவத் தளபதி அசிம் முனீர் வெளிப்படையாக எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவின் புளோரிடாவின் டம்பாவில் நடந்த ஒரு நிகழ்வில் உரையாற்றிய பாகிஸ்தானின் ராணுவ தளபதி அசிம் முனீர், இந்தியாவுடனான எதிர்காலப் போரில் தனது நாடு அச்சுறுத்தலை எதிர்கொண்டால் உலகின் பாதியை அழிப்பதாக அச்சுறுத்தினார். அணு ஆயுத நாடான பாகிஸ்தான், தான் போரில் வீழ்ச்சி அடைவதாக உணர்ந்தால் பாதி உலகத்தையும் சேர்த்து அழித்துவிடுவோம் எனக்கூறியுள்ளார்.
இரண்டாவது முறையாக அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள அவர் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக முதல் முறையாக அனு ஆயுத அச்சுறுத்தல் விடுத்துள்ளார். மேலும் சிந்து நதி நீரின் வழித்தடத்தில் இந்தியா உருவாக்கக்கூடிய எந்தவொரு உள்கட்டமைப்பையும் அழிப்போம் என எச்சரித்துள்ளார். பாகிஸ்தானுக்கான நீரை தடுக்க முயன்றால், எங்கள் நாட்டில் ஏவுகணைகளுக்கு பஞ்சமில்லை என்றும், அதனைக் கொண்டு இந்தியா கட்டும் அணைகளை தகர்ப்போம் என்றும் எச்சரித்திருக்கிறார்.
இதையும் படிங்க: இறங்கி வந்த பாஜக... STRICT ஆக NO சொன்ன ஓபிஎஸ்! காரணம் என்ன சொன்னாரு தெரியுமா?
“இந்தியா அணை கட்டும் வரை நாங்கள் காத்திருப்போம், அதன் பின்னர் 10 ஏவுகணைகள் மூலம் அதை அழிப்போம். சிந்து நதி இந்தியர்களின் குடும்பச் சொத்து அல்ல. கடவுளின் அருளால் எங்களிடம் ஏவுகணைகளுக்கு பஞ்சமில்லை” என அமெரிக்க மண்ணிலிருந்து இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஏப்ரல் மாதம் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு சிந்து நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கும் இந்தியாவின் முடிவு 250 மில்லியன் மக்களை பட்டினியால் வாடும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் முனீர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தேர்தல் ஆணையத்தை முற்றுகையிடும் இந்தியா கூட்டணி எம்பிக்கள்… உச்சகட்ட பரபரப்பு!