இந்தியாவுடனான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையிலான சில சிக்கலான பிரச்சினைகள் குறித்து பேச பாகிஸ்தான் விருப்பம் தெரிவித்துள்ளது.
''காஷ்மீர், சிந்து நதி நீர் ஒப்பந்தம், பயங்கரவாதம் இந்த மூன்றும் இந்தியாவுடன் முக்கிய பிரச்சினைகளாகவே உள்ளன. இந்தியாவுடனான எதிர்கால பேச்சுவார்த்தைகளில் இவை விவாதிக்கப்படலாம்'' என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிப் கூறியுள்ளார்.

நேற்று இந்தியாவுடன் நிலம், வான், கடல் பகுதிகளில் அனைத்து வகையான துப்பாக்கிச் சூடு, இராணுவ நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டதைத் தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சர் கவாஜா இதனைத் தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து மூலம் பாகிஸ்தான், இந்தியாவுடன் நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வைத் தேடுகிறது என்று நம்பப்படுகிறது.
இதையும் படிங்க: பேரழிவை ஏற்படுத்திய 'ஆபரேஷன் சிந்தூர்': 3 நாட்களில் பாக்., இழந்தது இத்தனை ஆயிரம் கோடியா..?

சிந்து நீர் ஒப்பந்தம், பயங்கரவாதம், காஷ்மீர் தொடர்பான முக்கிய பிரச்சினைகள் எதிர்காலத்தில் இந்தியாவுடன் விவாதிக்கப்படலாம் என்று ஆசிஃப் கூறியுள்ளார். "இவை இரண்டு நாடுகளும் சந்திப்பை நடத்தக்கூடிய மூன்று முக்கிய பிரச்சினைகள். போர் நிறுத்தம் அமைதிக்கு வழி வகுத்தால், அது வரவேற்கத்தக்க விஷயமாக இருக்கும்" என்று ஆசிஃப் கூறினார். பாகிஸ்தான் இந்தியாவுடன் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாகக் கூறியது. இந்தியாவும் அதற்கு ஒப்புக்கொண்டுள்ளது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக இந்திய ஆயுதப்படைகள் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் நடத்திய பின்னர் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்தன.

"காலப்போக்கில் அமைதிக்கான வாய்ப்புகள் உருவாகலாம். இந்தியாவும், குறிப்பாக அதன் தலைமையும் கட்சி நலன்களை விட நாட்டின் எதிர்காலத்திற்கு முன்னுரிமை அளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். அமைதிக்காக இரு தரப்பினரிடம் இருந்தும் சமமான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அது ஆசியாவின் முன்னேற்றத்திற்கான திறவுகோல். சீனா, துருக்கி, அஜர்பைஜான், வளைகுடா கூட்டாளிகள் உள்ளிட்ட முக்கிய நட்பு நாடுகள், நட்பு நாடுகளிடம் இருந்து பெறப்பட்ட இராஜதந்திர ஆதரவை பாராட்டுகிறேன்'' எனறும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாக்-உடன் போர் நிறுத்தம்... இந்தியாவுக்கு மத்தியஸ்தம் செய்ய டிரம்ப் யார்..? சந்தேகம் கிளப்பும் எதிர்கட்சிகள்..!