ஈரோடு மாவட்டம் பல்லடத்தில் ராமசாமி- பாக்கியம் தம்பதி கொலை செய்யப்பட்டனர். இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் மூன்று பேர் சந்தேகத்தின் பேரில் பிடிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

இதில், பிடிபட்ட இந்த மூன்று பேர் தான் இரட்டை கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் என்பது விசாரணையில் அம்பலமானது. இதனையடுத்து மூன்று பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். குற்றவாளிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஈரோடு இரட்டைமலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ள இந்த மூன்று பேர்தான் பல்லடம் மூவர் கொலையை செய்துள்ளது தெரிய வந்தது. எனவே இந்த 3 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: அப்போ ஈரோடு; இப்போ சேலம்; வயதான தம்பதி கொலை... கொதித்தெழுந்த டிடிவி தினகரன்!!

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள சேமலைக்கவுண்டன்பாளையம் கிராமத்தில் தெய்வசிகாமணி, அவரது மனைவியான அலமாத்தாள், மகன் செந்தில்குமார் ஆகிய மூவரின் தலையும் அடித்து நொறுக்கப்பட்டு ரத்தம் முழுவதும் வெளியேறி கொடூரமாக கொலை செய்யப்பட்டதுடன், அலமாத்தாள் அணிந்திருந்த ஆறு பவுன் நகை மற்றும் செந்தில்குமாரின் செல்போன் ஆகியவையும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் ஈரோடு இரட்டை கொலை வழக்கு.. முக்கிய குற்றவாளிகளை தட்டி தூக்கிய போலீஸ்..!