தமிழ் சினிமாவின் தளபதி என்று அழைக்கப்படும் நடிகர் விஜய், தனது திரை வாழ்க்கையின் மூலம் தமிழக மக்களின் இதயங்களை கைப்பற்றியவர். ஆனால், அவரது அரசியல் பயணம் தொடங்கியபோது, அந்த ரசிகர்களின் அன்பு இன்னும் ஆழமான, உணர்ச்சிகரமான வடிவத்தை அடைந்தது. 2024 பிப்ரவரி 2 அன்று தமிழக வெற்றி கழகம் (த.வெ.க) என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கியபோது, விஜயின் ரசிகர்கள் அது வெறும் கட்சி அல்ல, அவர்களின் கனவுகளுக்கான ஒரு இயக்கம் என்று உணர்ந்தனர். இந்த அன்பு, வெறும் பட ரசிகர்களின் உற்சாகத்தைத் தாண்டி, அரசியல் அடிப்படை உருவாகி, கட்சியின் வேர்களை வலுப்படுத்தியுள்ளது.
விஜயின் ரசிகர்கள், குறிப்பாக இளைஞர்கள், தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட பிரிவுகள், அவரை ஒரு தலைவராக மட்டுமல்லாமல், சமூக மாற்றத்தின் காவலராகக் கண்டுள்ளனர்.விஜயின் ரசிகர் அன்பின் வேர்கள், அவரது சினிமா பயணத்துடன் இணைந்தே உருவானவை. 2000களின் ஆரம்பத்தில், விஜய் மக்கள் இயக்கம் (விமி) என்று அழைக்கப்பட்ட அவரது ரசிகர் நற்பணி மன்றங்கள், தமிழகம் முழுவதும் 85,000க்கும் மேற்பட்ட கிளைகளாக விரிந்தன. ஒவ்வொரு கிளையிலும் குறைந்தது 25 உறுப்பினர்கள் இருந்தனர், அவர்கள் ரத்ததானம், அன்னதானம், கல்வி உதவி போன்ற சமூக நல உழைப்புகளை மேற்கொண்டனர்.

இந்த இயக்கம், 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியை ஆதரித்தது, 2021 உள்ளாட்சி தேர்தலில் 169 இடங்களில் 115 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிகள், ரசிகர்களின் அன்பை அரசியல் சக்தியாக மாற்றியது. விஜய் தனது கட்சியை அறிவித்தபோது, இந்த ரசிகர்கள் த.வெ.க-வின் முதல் தொண்டர்களாக மாறினர். அவர்கள் அன்பு, வெறும் உற்சாகமல்ல., அது தியாகமாகவும், அர்ப்பணிப்பாகவும் வெளிப்பட்டது. உதாரணமாக, கட்சியின் உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தில், ஒரு ஆண்டிற்குள் 1 கோடி உறுப்பினர்கள் இணைந்தனர், இது ரசிகர்களின் உண்மையான ஆதரவை பிரதிபலிக்கிறது.
இதையும் படிங்க: பெரம்பலூரில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி! ஆனால்... ட்விஸ்ட் வைத்த போலீஸ்
இந்தநிலையில், பிரச்சார பயணம் மேற்கொள்வதற்காக விஜய் பெரம்பலூர் வருகை தர உள்ளார். தவெக தலைவர் விஜயை வரவேற்கும் விதமாக, உதடுகளால் முத்தமிட்டு அவரது உருவப்படத்தை ஒரு மணி நேரத்தில் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த மதியழகன் என்பவர் உருவாக்கியுள்ளார். 6x8 அடி கேன்வாஸில் 2,000 முத்தக் குறிகளைப் பதித்து, அவர் இந்த ஓவியத்தை 0 வரைந்து உள்ளார்.
இதையும் படிங்க: அண்ணன் வராரு... வெலகு! செப். 13ல் விஜய் சுற்றுப்பயணம் தொடங்க இருப்பதாக தகவல்