இந்திய விமானப் படையின் (IAF) முதுகெலும்பாகக் கருதப்படும் உள்நாட்டுத் தயாரிப்பான ‘தேஜஸ்’ (LCA Tejas) போர் விமானம் மீண்டும் ஒரு விபத்தில் சிக்கியுள்ளது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக, தற்போது சேவையில் உள்ள சுமார் 30 தேஜஸ் போர் விமானங்களையும் இயக்காமல் தற்காலிகமாகத் தரையிறக்க விமானப் படை இன்று அதிரடி உத்தரவிட்டுள்ளது. ஒரு முக்கிய விமான படைத் தளத்தில் வழக்கமான பயிற்சிப் பயணத்தை முடித்துவிட்டுத் தரை இறங்கும் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. தரை இறங்கியபோது ஏற்பட்ட 'பிரேக்' கோளாறு காரணமாக விமானம் ஓடுதளத்தைத் தாண்டிச் சென்று விபத்துக்குள்ளானது.

விமானத்தில் கோளாறு ஏற்பட்டதை உணர்ந்த விமானி, சமயோசிதமாகச் செயல்பட்டு பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பினார். அவருக்குப் பெரிய காயங்கள் ஏதுமில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான தேஜஸ் விமானத்தின் கட்டமைப்பு கடுமையாகச் சேதமடைந்துள்ளது. இது மீண்டும் பயன்படுத்த முடியாத நிலைக்குச் சென்றுள்ளதால், இந்த விமானம் அதிகாரப்பூர்வமாகக் கைவிடப்பட (Write-off) வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: நைஜீரியா: சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான லாரி..!! 30 பேர் பரிதாப பலி..!!
தேஜஸ் விபத்துகளின் வரலாறு: மார்ச் 2024: ஜெய்சால்மர் அருகே முதல் விபத்து (விமானி தப்பினார்). நவம்பர் 2025: துபாய் விமானக் கண்காட்சியின் போது நிகழ்ந்த விபத்தில் விங் கமாண்டர் நமன் சியால் வீரமரணமடைந்தார். பிப்ரவரி 2026: தற்போது தரை இறங்கும் போது நிகழ்ந்த இந்த மூன்றாவது விபத்து.
ஒருபுறம் விபத்துகள் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், மறுபுறம் எச்.ஏ.எல் (HAL) நிறுவனம் 180 தேஜஸ் Mk1A விமானங்களை ஒப்படைப்பதில் சுணக்கம் காட்டி வருகிறது. அமெரிக்காவின் ஜி.இ (GE Aerospace) நிறுவனம் என்ஜின்களை வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதமே இதற்கு முதன்மைக் காரணம் எனக் கூறப்படுகிறது.
ஒட்டுமொத்தத் தேஜஸ் விமானங்களும் தரையிறக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றின் இயந்திர அமைப்புகள் மற்றும் பிரேக் சிஸ்டம்கள் குறித்து விரிவான தொழில்நுட்பத் தணிக்கை நடத்த விமானப் படை உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணை முடிந்து பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பின்னரே தேஜஸ் விமானங்கள் மீண்டும் வானில் சீறும்.
இதையும் படிங்க: தென்னாபிரிக்கா: நேருக்கு நேர் மோதிக்கொண்ட லாரி-மினி வேன்..!! 11 பேர் உயிரிழந்த சோகம்..!!