இலங்கையின் கிழக்குக் கடற்கரையில் உருவான டிட்வா புயல் நாடு முழுவதும் பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் 17 முதல் தொடரும் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 56 பேர் உயிரிழந்துள்ளனர், 21 பேர் காணாமல் போயுள்ளனர், 14 பேர் காயமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட 12,313 குடும்பங்களைச் சேர்ந்த 43,991 பேர் தற்போது பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தென்மேற்கு வங்கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று புயலாக மாறி உள்ளது. இந்த புயலுக்கு டிட்வா" என்று பெயரிடப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த டிட்வா புயல் தென்மேற்கு வங்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதி வழியாக வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து நவம்பர் 30ம் தேதி அன்று அதிகாலைக்குள் வட தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா கரையை வழியாக கடக்கும் என கூறப்பட்டுள்ளது.

டித்வா புயலில் அன்புக்குரிய உறவுகளை இழந்த இலங்கை மக்களுக்கு எனது இதயபூர்வமான அனுதாபங்கள் தெரிவித்து கொள்வதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பாதுகாப்பு, ஆறுதல் மற்றும் துரித மீட்சிக்காக பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அன்பாக அழைத்த பிரதமர் மோடி..!! 2026ல் இந்தியா வருகிறார் கனடா பிரதமர்..!! காரணம் இதுதான்..!!
கடல்மார்க்கமாக மிகவும் நெருங்கிய அயலுறவுடன் எமது கூட்டொருமைப்பாட்டினை காண்பிக்கும் முகமாக சாகர் பந்து நடவடிக்கையின் கீழ் முக்கிய HADR உதவி மற்றும் நிவாரணப் பொருட்களை இந்தியா உடனடி அவசர உதவியாக அனுப்பி வைத்துள்ளது என்றும் கூறினார்.. எவ்வாறான சூழலிலும் தேவையான மேலதிக ஆதரவு மற்றும் உதவிகளை வழங்க நாம் தயாராக உள்ளோம் என்றும் கூறினார்.
இந்தியாவின் அயலுறவுக்கு முதலிடம் கொள்கை மற்றும் மஹாசாகர் தொலைநோக்கு ஆகியவற்றின் வழிகாட்டலுடன், உதவிகள் தேவைப்படும் எந்நேரத்திலும் இந்தியா இலங்கையுடன் தொடர்ந்து துணைநிற்கும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: பணி சிறக்கட்டும் சூர்யகாந்த்... சுப்ரீம்கோர்ட் புதிய தலைமை நீதிபதிக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!