இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் பதற்றம் தற்போது மத்திய கிழக்கு பிராந்தியத்தை மிகுந்த அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள ஒரு உச்சகட்ட நிலையை எட்டியுள்ளது. இது வெறும் பதற்றம் அல்ல., அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தொடங்கிய பெரிய அளவிலான இராணுவத் தாக்குதல்களால் முழு அளவிலான போராக மாறியுள்ளது.
இந்தப் போரின் விளைவாக உலக அளவில் பல்வேறு தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளன. ஹார்முஸ் நீரிணைப்பை ஈரான் மூடும் அச்சுறுத்தல் எழுந்துள்ளதால் உலகப் பொருளாதாரம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இந்தியாவில் விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. போர் பதற்றம் நிலவும் நாடுகளில் வசிக்கும் இந்தியர்களை மீட்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த கனடா பிரதமர் மார்க் கார்னி முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக்கு பிறகு இரு நாட்டு தலைவர்களுடன் கூட்டாக பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். இந்தியா - கனடா இடையிலான வர்த்தகத்தை 50 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார். இந்தியா - கனடா இடையே விரைவில் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் போடப்படும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாஜக பொதுக்கூட்டத்தில் சர்ப்ரைஸ்... திமுக தலையில் பேரிடியை இறக்கிய மோடி... தரமான சம்பவம்...!!
மேலும், வளைகுடா நாடுகள் மீதான ஈரானின் தாக்குதல் வருத்தத்தை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அமைதியைதான் இந்தியா எப்போதும் வலியுறுத்தும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார். வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: இஸ்ரேலில் கால்பதிக்கும் பிரதமர்.. நெசெட்டில் களமிறங்கும் முதல் இந்திய தலைவர்....!!