தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று கரூர் வேலுச்சாமிபுரத்தில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது கூட்ட நெரிசலில் தள்ளு முள்ளு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கூட்டநெரிசலில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலர் மயக்கமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
கரூர் அரசு மருத்துவமனையில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்த நிலையில் அடுத்தடுத்து அனுமதிக்கப்பட்டனர். இதில் 40 பேர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். குழந்தைகள், ஆண்கள், பெண்கள் உட்பட 40 பேர் உயிரிழந்துள்ள தாக கூறப்படும் நிலையில், பலி எண்ணிக்கை 50 தாண்டக் கூடுமென அஞ்சப்படுகிறது.
இதையும் படிங்க: இனி நாடு முழுவதும் BSNL 4G சேவை.. தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!!
இதனிடையே விஜய் பிரச்சார கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப் பக்கத்தில், "தமிழ்நாட்டின் கரூரில் ஓர் அரசியல் பேரணியின் போது நிகழ்ந்த துயரமான சம்பவம் மிகவும் வருத்தம் அளிக்கிறது. இந்த நிகழ்வில், தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கடினமான காலகட்டத்தில் அவர்கள் மன வலிமையைப் பெற விரும்புகிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: இத 8 வருஷத்துக்கு முன்னாடியே செஞ்சிருக்கலாமே? பிரதமருக்கு முதல்வர் சரமாரி கேள்வி…!