குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு தமிழகத்தைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவரும், தற்போது மகாராஷ்டிர ஆளுநராக இருக்கும் சி.பி. ராதாகிருஷ்ணன் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கர், உடல்நலக் காரணங்களைக் காட்டி தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 9 அன்று நடைபெறவுள்ள குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கு சி.பி. ராதாகிருஷ்ணனை பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி தனது வேட்பாளராக அறிவித்துள்ளது. சி.பி. ராதாகிருஷ்ணன் 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 20 அன்று தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் பிறந்தவர். இவரது அரசியல் பயணம் மிக நீண்டதும், பல்வேறு பொறுப்புகளை உள்ளடக்கியது.

பாஜக வேட்பாளர் சிபி ராதாகிருஷ்ணனுக்கு, என் டி ஏ கூட்டணி கட்சி தலைவர்கள் ஆதரவு திரட்டி வருகின்றனர். எதிர்க்கட்சியினர் சிபி ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பாஜக வேட்பாளர் சிபி ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என அனைத்து எதிர்கட்சிகளுக்கும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: வாழ்த்துங்க தலைவரே! பிரதமர் மோடியிடம் வாழ்த்து பெற்ற சி.பி. ராதாகிருஷ்ணன்..!
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற என்டிஏ தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்களிடம் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசி வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு துணை தலைவர் தேர்தல் தொடர்பாக பாஜக வேட்பாளர் சிபி ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வேண்டுமென அனைத்து எதிர்கட்சிகளுக்கும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: கண்ண மூடிட்டு ஆதரிக்க முடியுமா? அரசியல் ரீதியா அணுகனும்! சிபிஆர் குறித்து TKS இளங்கோவன் பேட்டி..!