கோவாவில் இன்று முதல் ஜனவரி 30-ம் தேதி வரை நடைபெறும் 2026 இந்திய எரிசக்தி வார மாநாடு வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த மாநாடு இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் உலகளாவிய முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: "இந்தியா - ஐரோப்பிய யூனியன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் உற்பத்தி மற்றும் சேவைத் துறையை மேலும் வலுப்படுத்தும். இந்தியா விரைவில் உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு மையமாக உருவாகும். அனைத்து துறைகளிலும் தொடர்ச்சியான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதலீட்டாளர்களுக்கு ஏற்ற சூழல் உருவாக்கப்பட்டு வருகிறது. எரிசக்தித் துறையில் இந்தியா உலகின் முதல் ஐந்து ஏற்றுமதியாளர்களில் ஒன்றாக உள்ளது."
மேலும் பேசிய பிரதமர், "இந்தியாவின் எரிசக்தி துறை 500 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 45 லட்சம் கோடி ரூபாய்) முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகிறது. உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முன் வர வேண்டும்" என்று அழைப்பு விடுத்தார்.
இதையும் படிங்க: 18 ஆண்டு பேச்சுவார்த்தை!! இறுதியானது அனைத்து ஒப்பந்தங்களின் 'தாய்' ஒப்பந்தம்! இந்தியாவின் மாஸ் மொமண்ட்!

சமீபத்தில் இந்தியாவில் கப்பல் கட்டுவதற்காக 70,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் தொடங்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்தியா அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்பதால் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யக்கூடிய வலுவான எரிசக்தி துறையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. மலிவு விலையில் சுத்திகரிப்பு செய்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரித்து வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்த மாநாடு இந்தியாவின் எரிசக்தி துறையில் உலக அளவில் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நடைபெறுகிறது. பிரதமரின் இந்த அழைப்பு உலக முதலீட்டாளர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பொருளாதார வளர்ச்சியில் எரிசக்தி துறை முக்கிய பங்கு வகிக்கும் என்பதை இந்த மாநாடு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பிரதமர் மோடி அற்புதமான தலைவர்! நல்ல நண்பர்! நல்ல ஒப்பந்தம் நமக்கு அமையும்! ஐஸ் மழை பொழியும் ட்ரம்ப்!