• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    “யாராக இருந்தாலும் விடமாட்டோம்...” - நாட்டையே உலுக்கிய விவகாரத்தில் பிரதமர் மோடி அதிரடி...!

    நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளுக்கு தீர்வு கோரி மாணவர்கள் நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி முக்கிய உறுதியை அளித்துள்ளார்.
    Author By Amaravathi Thu, 23 Jul 2026 10:22:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    PM Modi open up about Neet issue

    நாடு முழுவதும் மாணவர்களின் போராட்டம் பெரும் கவனத்தை ஈர்த்து, அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வந்தன. இந்தச் சூழலில், பிரதமர் நரேந்திர மோடி உறுதியளிக்கும் வகையில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "நமது இளைஞர்களின் நலன் மற்றும் எதிர்காலத்தை விட முக்கியமானது வேறு எதுவும் இல்லை. தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தொடர்புடையவர்களுக்கு விரைவான மற்றும் கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய, விரைவு நீதிமன்றங்களை அமைக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், இதுதொடர்பாக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மாணவர்களின் நலனை பாதுகாக்க மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த முடிவு அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதேபோல், "இளைஞர்களின் எதிர்காலத்தை பாதிக்க முயற்சிப்பவர்கள் எவரும் தப்பிக்க முடியாது" என்றும் உறுதியளிக்கும் வகையில் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கிடையே, டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் பல்வேறு மாணவர் அமைப்புகள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டன. தொடர்ந்து, திங்கள்கிழமை நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் நோக்கில் பேரணியாக சென்ற மாணவர்கள் டெல்லி காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், தடியடி நடத்தி கலைக்கப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியது.

    இதையும் படிங்க: நீட் எதிர்ப்பு... காங். இரட்டை வேடம் அம்பலம்..? கொண்டு வந்ததே நீங்க தான...? விளாசிய TTV தினகரன்..!

    இதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தன. தமிழகத்திலும் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆகியோர் தங்களது கண்டனத்தை தெரிவித்திருந்தனர். அதேபோல், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் டெல்லியில் உள்ள பிரதமரின் இல்லம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவர் கைது செய்யப்பட்டார்.

    இந்த நிலையில், மாணவர்கள் இன்றும் நான்காவது நாளாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். தமிழகத்திலும், குறிப்பாக சென்னையில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. சில இடங்களில் கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதே நேரத்தில், அமைதியான முறையிலும் மாணவர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    மாணவர்களின் முக்கிய கோரிக்கை என்னவென்றால், நீட் தேர்வு அறிமுகமானதிலிருந்து வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்பதுதான். எனவே, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், சமீபத்திய வினாத்தாள் கசிவு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதற்கு பொறுப்பேற்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. போராட்டக்காரர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் இதுவரை எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. நேற்றைய தினம் மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா செய்தியாளர்களை சந்தித்தபோது, "இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம். வினாத்தாள் கசிவு ஒரு மாநிலத்தில் மட்டும் நடைபெறவில்லை. பல மாநிலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. உதாரணமாக தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்திலும் இதுபோன்ற நிகழ்வுகள் பதிவாகியுள்ளன" என்று விளக்கம் அளித்திருந்தார்.

    இருப்பினும், மாணவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் மத்திய அரசு தரப்பிலிருந்து இதுவரை உறுதியான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்ற விமர்சனம் நிலவி வந்தது. அந்தச் சூழலில்தான் தற்போது பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக உறுதியளிக்கும் வகையில் இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.
     அதில், "நமது இளைஞர்களின் நலனும் எதிர்காலமும் எங்களுக்கு மிக முக்கியமானது. வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது விரைவான மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தேவையான உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. இளைஞர்களின் எதிர்காலத்தை பாதிக்க முயற்சிப்பவர்கள் எவரும் தப்பிக்க முடியாது" என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

    எனவே, மாணவர்களின் போராட்டம் நான்காவது நாளாக தொடரும் நிலையில், இந்த விவகாரத்தில் ஒரு தீர்வை எடுக்க வேண்டிய சூழலுக்கு மத்திய அரசு தள்ளப்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அந்தப் பின்னணியில்தான் பிரதமர் நரேந்திர மோடி இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்று புரிந்துகொள்ளப்படுகிறது.

    இதையும் படிங்க: வெடிக்கும் நீட் பிரச்சனை... வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்... மாணவர்களுக்கு அழைப்பு..!

    மேலும் படிங்க
    "ஜென் Z இளைஞர்களைக் கவர ரீல்ஸ் போடுங்க!" - மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவு!

    "ஜென் Z இளைஞர்களைக் கவர ரீல்ஸ் போடுங்க!" - மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவு!

    தமிழ்நாடு
    "பாட்டிலுக்கு கூட 10 ரூபாய் கேட்டா அவ்ளோதான்!" - டாஸ்மாக் பணியாளர்களுக்கு செக் வைத்த நிர்வாகம்!

    "பாட்டிலுக்கு கூட 10 ரூபாய் கேட்டா அவ்ளோதான்!" - டாஸ்மாக் பணியாளர்களுக்கு செக் வைத்த நிர்வாகம்!

    தமிழ்நாடு
    "மத்திய அமைச்சரவையில் திடீர் திருப்பம்!" - மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு  ராஜினாமா!

    "மத்திய அமைச்சரவையில் திடீர் திருப்பம்!" - மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு ராஜினாமா!

    இந்தியா
    "47 அதிகாரிகள் கூண்டோடு அதிரடி பணிநீக்கம்!" - நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமை (NTA) மீது மத்திய அரசு அதிரடி!  

    "47 அதிகாரிகள் கூண்டோடு அதிரடி பணிநீக்கம்!" - நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமை (NTA) மீது மத்திய அரசு அதிரடி!  

    இந்தியா
    மத்திய அரசுக்குச் சவால் விட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா! நீட் தேர்வு நிச்சயம் திரும்ப பெறப்படும்!

    மத்திய அரசுக்குச் சவால் விட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா! நீட் தேர்வு நிச்சயம் திரும்ப பெறப்படும்!

    தமிழ்நாடு
    கல்வி அமைச்சரை மோடி அரசு ஏன் பாதுகாக்கிறது? காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சரமாரி கேள்வி!

    கல்வி அமைச்சரை மோடி அரசு ஏன் பாதுகாக்கிறது? காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சரமாரி கேள்வி!

    இந்தியா

    செய்திகள்

    "ஜென் Z இளைஞர்களைக் கவர ரீல்ஸ் போடுங்க!" - மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவு!

    தமிழ்நாடு

    "பாட்டிலுக்கு கூட 10 ரூபாய் கேட்டா அவ்ளோதான்!" - டாஸ்மாக் பணியாளர்களுக்கு செக் வைத்த நிர்வாகம்!

    தமிழ்நாடு

    "மத்திய அமைச்சரவையில் திடீர் திருப்பம்!" - மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு ராஜினாமா!

    இந்தியா

    "47 அதிகாரிகள் கூண்டோடு அதிரடி பணிநீக்கம்!" - நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமை (NTA) மீது மத்திய அரசு அதிரடி!  

    இந்தியா
    மத்திய அரசுக்குச் சவால் விட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா! நீட் தேர்வு நிச்சயம் திரும்ப பெறப்படும்!

    மத்திய அரசுக்குச் சவால் விட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா! நீட் தேர்வு நிச்சயம் திரும்ப பெறப்படும்!

    தமிழ்நாடு
    கல்வி அமைச்சரை மோடி அரசு ஏன் பாதுகாக்கிறது? காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சரமாரி கேள்வி!

    கல்வி அமைச்சரை மோடி அரசு ஏன் பாதுகாக்கிறது? காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சரமாரி கேள்வி!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share