வருங்கால உலகின் போக்கை நிர்ணயிக்கப்போகும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அதிகார மையமாக இந்தியா உருவெடுத்துள்ள நிலையில், அனைத்துலக AI உச்சிமாநாடு 2026 (India-AI Impact Summit) நாளை டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது. பிப்ரவரி 16 முதல் 20-ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெறவுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், பிரேசில் அதிபர் லுலா டா சில்வா மற்றும் பின்லாந்து பிரதமர் பெட்டரி ஓர்போ உள்ளிட்ட 20 நாடுகளின் உலகத் தலைவர்கள் இன்று தலைநகர் டெல்லிக்கு வருகை தந்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்த ஹை-புரொஃபைல் மாநாடானது, உலகளாவிய தெற்கில் (Global South) நடத்தப்படும் முதல் மிகப்பெரிய AI உச்சிமாநாடு என்ற பெருமையைப் பெறுகிறது. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய உலகத் தலைவர்களுக்கு இந்திய பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நாளை காலை பாரத் மண்டபத்தில் நடைபெறும் தொடக்க விழாவில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ள நிலையில், தொழில்நுட்ப ஜாம்பவான்கள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களின் சி.இ.ஓ-க்கள் மற்றும் 45-க்கும் மேற்பட்ட நாடுகளின் அமைச்சர்கள் இந்த ‘மெகா ஈவென்ட்டில்’ கலந்து கொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஐந்து நாள் மாநாட்டில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுகாதாரம், கல்வி மற்றும் வேளாண்மைத் துறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய புரட்சிகரமான மாற்றங்கள் குறித்து பிரையன் ஸ்டார்மிங் அமர்வுகள் நடத்தப்பட உள்ளன. குறிப்பாக, இந்தியத் தரவுகளுடன் 22 மொழிகளில் உருவாக்கப்பட்ட உள்நாட்டு AI மாடல்கள் இந்த நிகழ்வில் லான்ச் செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. மாநாட்டையொட்டி டெல்லி முழுவதும் டைட் செக்யூரிட்டி போடப்பட்டுள்ளதுடன், சர்வதேசத் தலைவர்களின் வருகையால் தலைநகரே விழாக்கோலம் பூண்டுள்ளது. உலக நாடுகளுக்கு இடையேயான தொழில்நுட்பப் பகிர்வு மற்றும் ரெஸ்பான்சிபிள் AI (பொறுப்பான செயற்கை நுண்ணறிவு) குறித்த முக்கிய ஒப்பந்தங்கள் இந்த உச்சிமாநாட்டின் இறுதி நாட்களில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: முடிவுக்கு வரும் 50 ஆண்டு பாரம்பரிய சவுத் பிளாக்..!! குட்பை சொல்லும் பிரதமர் மோடி..!! நாளை முதல் புதிய அலுவலகத்தில்..!!
இதையும் படிங்க: “விவசாயிகளை அமெரிக்காவிடம் விற்றுவிட்டார் மோடி!” எம்பி மாணிக்கம் தாகூர் கடும் குற்றச்சாட்டு!