கொல்கத்தா: மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று கொல்கத்தாவில் பிரமாண்ட சாலைவலம் மேற்கொண்டார். வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் பாங்காவோன் தொகுதி பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த பிறகு, கொல்கத்தா நகர மக்களிடையே வாக்கு சேகரிக்கும் வகையில் அவர் சாலைவலம் நடத்தினார்.
சாலையின் இருபுறங்களிலும் ஆயிரக்கணக்கான மக்களும், பாஜக தொண்டர்களும் திரண்டு நின்று பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். “மோடி! மோடி!” என்ற கோஷங்கள் விண்ணைப் பிளக்க, மக்கள் கை அசைத்தும், மாலை அணிவித்தும், பூக்களைத் தூவியும் பிரதமரை வரவேற்றனர். பிரதமரின் வருகையையொட்டி கொல்கத்தா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
சாலைவலத்துக்கு முன்பு, பிரதமர் மோடி வடக்கு கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற தந்தானியா காளி கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார். இந்த வழிபாட்டுக்குப் பிறகு அவர் சாலைவலத்தைத் தொடங்கினார். மேற்கு வங்க மக்களின் ஆதரவு இந்த சாலைவலத்தில் தெளிவாகத் தெரிந்தது.
இதையும் படிங்க: தள்ளாத 99 வயதிலும் ஜனநாயக கடமை! 1946ல் ஓட்டு போடுறேன்! முன்னாள் அமைச்சருக்கு மோடி பாராட்டு!
জয় মা কালী!
জয় মা দুর্গা!
কলকাতায়, আজ সন্ধ্যায় আমি ঠনঠনিয়া কালীবাড়িতে প্রার্থনা করলাম।
এই প্রাচীন মন্দিরটির বাঙালি সংস্কৃতি, বিশেষত: কলকাতার সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক। শ্রী রামকৃষ্ণের সঙ্গেও এই মন্দিরের গভীর সংযোগ রয়েছে, তিনি প্রায়শই এখানে প্রার্থনা করতেন।
আমি ভারতের… pic.twitter.com/kMh1W15JTk
— Narendra Modi (@narendramodi) April 26, 2026
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெறவுள்ளது. பிரசாரத்துக்கு இன்னும் ஒரே ஒரு நாள் மட்டுமே உள்ளதால், அரசியல் கட்சிகள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. பிரதமர் மோடியின் இந்த சாலைவலம் பாஜகவுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி மக்களிடம் பேசுகையில், மேற்கு வங்கத்தில் மாற்றத்துக்கான நேரம் வந்துவிட்டதாகவும், வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்கு பாஜகவுக்கு வாக்களிக்குமாறும் வலியுறுத்தினார். கொல்கத்தா மக்களின் அன்பான வரவேற்பு தனக்கு பெரும் உற்சாகத்தை அளிப்பதாக அவர் தெரிவித்தார்.
மேற்கு வங்க தேர்தல் பிரசாரத்தின் இறுதி கட்டத்தில் பிரதமர் மோடியின் சாலைவலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சாலைவலம் பாஜகவின் வெற்றிக்கு பெரும் ஊக்கமாக அமையும் என்று கட்சி நிர்வாகிகள் நம்புகின்றனர்.
இதையும் படிங்க: ஹுக்ளி நதிக்கரையில் ஒரு படகு பயணம்!! போட்டோ எடுத்து மகிழ்ந்த பிரதமர் மோடி! கங்கைக்கு நன்றி சொல்லி உருக்கம்!