கோவை சூலூர் பகுதியைச் சேர்ந்த லேத் ஒர்க்ஷாப் தொழிலாளி ஒருவரின் 10 வயது மகள், தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, அருகிலுள்ள மளிகை கடைக்குச் சென்றுள்ளார். அதன் பின்னர் சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாமல் மயமாகியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்காததால், இதுகுறித்து சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார், சிறுமி பாதுகாப்பாக இருப்பதாக பெற்றோரிடம் தொடர்ந்து கூறி வந்ததாகத் தெரிகிறது. ஆனால், அடுத்த சில மணி நேரங்களிலேயே சிறுமி கண்ணம்பாளையம் குளத்தில் சடலமாக மீட்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியானது. இந்த சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியானது.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: 4 தொகுதிகளில் பாமக வெற்றி.. மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம்...! அன்புமணி அறிக்கை!
கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சியளிக்கிறது என கூறினார். சிறுமியை படுகொலை செய்த கயவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் முதலமைச்சர் விஜய் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: விஜய் ஜெயிச்சது சுனாமி-லாம் இல்ல..! தவெக மீது விமர்சனங்களை கொட்டிய அன்புமணி..!