2026ம் ஆண்டு நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வரும் நிலையில், பாமகவில் மட்டும் அப்பா மற்றும் மகன் இடையிலான பஞ்சாயத்து புதிய உச்சம் தொட்டு வருகிறது. முதலில் அன்புமணிக்கு ஆதரவாக செயல்படுபவர்களை ராமதாஸ் நீக்கம் செய்து வந்தார். அதற்கு பதிலாக புதிய நிர்வாகிகளையும் நியமனம் செய்தார்.

ராமதாசுக்கு ஆதரவாக எம்.எல்.ஏ. அருள் செயல்பட்டு வருகிறார். இதன்காரணமாக அவரை கட்சியின் இணை பொதுச்செயலாளராக ராமதாஸ் நியமித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தனக்கு எதிராக செயல்பட்ட அருளை கட்சியில் இருந்து நீக்குவதாக அன்புமணி ராமதாஸ் அறிவித்தார். ஆனால் தன்னை நீக்க பாமக நிறுவனர் ராமதாஸுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என அருள் அழுத்தம் திருத்தமாக தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே, இன்று தைலாபுரம் தோட்டத்து வீட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், அருளை கட்சியில் இருந்து நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: #BREAKING: பாமகவில் இருந்து அருள் நீக்கம்... அன்புமணி அதிரடி உத்தரவு... அதிருப்தியில் தொண்டர்கள்
பாமகவில் இருந்து அருள் எம்.எல்.ஏ.வை நீக்க அன்புமணி ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை. ஜி.கே.மணி மூலம் சபாநாயகருக்கு கடிதம் கொடுத்துதான் அருளை நீக்க முடியும். பாமகவில் நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உள்ளது. பாமக கொறடாவாக அருள் தொடர்வார். அருளுக்கு நிர்வாகக்குழு உறுப்பினர், இணை பொதுச்செயலாளர் பதவிகளை வழங்க உள்ளேன். செயற்குழு, பொதுக்குழு, நிர்வாகக் குழுவை கூட்டி எந்த கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

தொடர்ந்து பேசிய ராமதாஸ், பாமக மகளிர் மாநாடு பூம்புகாரில் நடக்கிறது. இதை பார்வையிட வருகிற 10-ந்தேதி செல்கிறேன் என்றார். அன்புமணி குறித்த செய்தியாளர்களின் கேள்விகளை தவிர்த்த அவர், அன்புமணி ராமதாஸ் கேள்விக்கு, என்னிடம் பதில் இல்லை எனக்கூறியது பாமகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பதவிக்காக பெத்த அப்பனையே விட்டு போறாரு.. அன்புமணியை விளாசிய MLA அருள்..!