திமுக அரசின் திட்டங்களையும் சாதனைகளையும் மக்களிடம் எடுத்துரைத்து, 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை மேற்கொள்ளும் விதமாக ’ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பிரசார இயக்கத்தை தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, சென்னை ஆழ்வார்பேட்டையில் ’ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தை தொடக்கிவைத்து, வீடுவீடாகச் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மக்களை சந்தித்தார். அவருடன் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் உடன் இருந்தார்.

இதனைத் தொடர்ந்து, மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 208 நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் மற்றும் 50 ஆரம்ப சுகாதார மையங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். இதனிடையே, தமிழக அமைச்சர்கள், திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவரும் அவரவர் பகுதிகளில் மக்களை நேரில் சந்தித்து ’ஓரணியில் தமிழ்நாடு’ பிரசார இயக்கத்தின் கீழ் உறுப்பினர் சேர்க்கையையும் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் திமுகவினர் வீட்டிற்கு வந்தால் அவர்களிடம் இந்த மூன்று அடிப்படைக் கேள்விகளை கேளுங்கள் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்ததரராஜன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஓரணியில் தமிழ்நாடு: வீடு வீடாக சென்று பரப்புரையை தொடங்கியது திமுக..!

இதுக்குறித்த அவரது எக்ஸ் தள பதிவில், ஓரணியில் தமிழ் நாடாம்... திராவிட மாடல்.. உறுப்பினர் சேர்க்க வருவார்களாம வீடு வீடாய் வருவார்களாம் வீட்டில் உள்ளவர்கள் கேட்க வேண்டிய மூன்று கேள்விகள் அம்மா கேட்க வேண்டியது. கேஸ்சுக்கு நூறு ரூபாய் மானியம் தருவேன் என்றீர்களே தந்தீர்களா? தம்பி கேட்க வேண்டியது கல்வி கடனை ரத்து செய்வோம் என்று சொன்னீர்களே செய்தீர்களா?

ஐயா கேட்க வேண்டியது மாதம் மாதம் கரண்ட் ரீடிங் எடுப்பேன் என்று சொன்னீர்களே செஞ்சீர்களா? இன்னும் பல கேள்விகள் இருந்தாலும் இந்த மூன்று அடிப்படைக் கேள்விகளை கேளுங்கள்... அவர்களிடமிருந்து இல்லை என்று தான் பதில் வரும் அப்படி என்றால் மக்கள் சொல்வது வாக்குகளும் இல்லை உறுப்பினரும் இல்லை என்பதுதான் ஆக ஒட்டுமொத்தமாக திராவிட மாடலுக்கு "எதிரணியில் தமிழ்நாடு" "ஓர் அணியில் தமிழ்நாடு "அவர்கள் சொல்வது அவர்களின் "எதிரணியில் தமிழ்நாடு" மக்கள் சொல்வது என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ‘ஓரணியில் தமிழ்நாடு' - Common DP வையுங்கள்... திமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!!