தமிழக வெற்றி கழக தலைவர் ஜோசப் விஜய் தலைமையில் பொறுப்பேற்ற புதிய அரசு, தமிழ்நாட்டின் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் விஷயத்தில் உடனடி மற்றும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கனிமவளக் கொள்ளை என்பது பல ஆண்டுகளாக தமிழ்நாட்டைப் பாதித்து வரும் ஒரு பெரிய பிரச்சினை. மணல், கல், சுண்ணாம்பு போன்ற வளங்களை சட்டவிரோதமாக எடுத்து அண்டை மாநிலங்களுக்கு கடத்துவது, சுற்றுச்சூழலைச் சீரழிப்பது, அரசு வருவாயை இழப்பது ஆகியவை இதன் முக்கிய விளைவுகள்.
இந்தப் பின்னணியில், தவெக அரசு இந்தப் பிரச்சினையை முன்னுரிமையாகக் கருதி, கனிமவளத் துறை அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு தலைமையில் தீவிர ஆய்வு மற்றும் அமலாக்க நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. பொறுப்பேற்ற உடனேயே அரசு, மாநிலம் முழுவதும் உள்ள கல் குவாரிகளின் செயல்பாடுகளைத் தீவிரமாகக் கண்காணிக்க உத்தரவிட்டது.

2,000க்கும் மேற்பட்ட உரிமம் பெற்ற கல் குவாரிகள் இருக்கும் நிலையில், பல இடங்களில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் எடுப்பது, எல்லை மீறி செயல்படுவது, சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறுவது போன்ற புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து அமைச்சர் பிரபு மாநில அளவில் ஆய்வுகளை உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: உச்சக்கட்ட அட்டூழியம்... போலீஸ் கையை உடைத்த தவெகவினர் கைது... தட்டிக்கேட்டது தப்பா?
இந்த நிலையில், கன்னியாகுமரியில் கனிம வளம் ஏற்றிச் சென்ற லாரிகளை முறையாக பரிசோதிக்காமல் பணம் பெற்ற குற்றச்சாட்டில் மூன்று போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அருமனை தலைமை காவலர் கோபால், ஈத்தாமொழி ஏட்டு வினோத் மற்றும் கன்னியாகுமரி காவலர் வாட்சன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருக்கின்றனர். பணம் பெற்று லாரிகளை அனுமதித்த குற்றச்சாட்டை குமரி மாவட்ட கண்காணிப்பாளர் மூன்று பேரையும் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: டாஸ்மாக்கில் கூடுதலாக ரூ.10 வசூலிப்பு!! கண்காணிக்கும் உளவுத்துறை போலீசார்! சைலண்டாக பறந்த உத்தரவு!