வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

TVK Cabinetல் 20 மாவட்டங்கள் Missing! அமைச்சரவை பட்டியல் ஏமாற்றம்! புறக்கணிப்பா..?

தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படும் நிலையில் 20 மாவட்டங்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை.

தமிழ்நாட்டின் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று, சி. ஜோசப் விஜய் தலைமையில் புதிய அரசை அமைத்தது. மே 10, 2026 அன்று சென்னையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட 10 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர்.

முதல்வராக ஜோசப் விஜய் முதலமைச்சராக பதவியேற்று சுமார் பத்து நாட்களுக்குப் பிறகு, இன்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுகிறது. சென்னை ஆளுநர் மாளிகையில் காலை 10 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில் 23 புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளனர். இதன் மூலம் தவெக அரசு கூட்டணி கட்சிகளுடன் இணைந்து வலுவான ஆட்சியமைப்பை நோக்கி முன்னேறுகிறது.

தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையில் இடம்பெறும் 23 அமைச்சர்களின் பட்டியல் வெளியானது. இதற்கிடையில் பெரும் ஏமாற்றம் நிகழ்ந்துள்ளது. தமிழக அமைச்சரவையில் 20 மாவட்டங்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை. நீலகிரி, திருப்பூர், தென்காசி, நெல்லை, தேனி, திண்டுக்கல், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, பெரம்பலூர், திருவாரூர், தர்மபுரி, கரூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை.

இதையும் படிங்க: விஜய் அரசின் Women Power! அமைச்சரவையில் 4 பெண்கள்… எந்தெந்த துறைகள்..?

இருப்பினும் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெறாத குமரி மாவட்டத்திற்கு மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருக்கிறது. பல்வேறு புதிய முகங்களுக்கு தமிழக அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டிருந்தாலும் 20 மாவட்டங்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்பது ஏமாற்றமாக அமைந்திருக்கிறது. 

இதையும் படிங்க: #BREAKING போட்டுறா வெடிய… தமிழக அமைச்சர்களாக பதவியேற்க உள்ள 23 பேர் யார்?… வெளியானது அதிகாரப்பூர்வ பட்டியல்…!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी