வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

ஆட்சிக் கவிழ்ப்பு சதி… மேலும் 3 பேர் Arrest… துருவி துருவி விசாரிக்கும் போலீஸ்… பரபரப்பு..!!

ஆட்சிக் கவிழ்ப்பு சதி விவகாரத்தில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. என். இளையராஜா சென்னை மாநகர காவல் ஆணையரிடம் அளித்த புகாரில், தன்னை ஒரு நபர் தொடர்பு கொண்டு பேரம் பேசியதாகக் கூறினார். பிறகு திருநாவுக்கரசு என அடையாளம் காணப்பட்டார். திருநாவுக்கரசு இளையராஜாவிடம், “முக்கிய கட்சியைச் சேர்ந்தவர்கள் உங்களிடம் பேசச் சொன்னார்கள்” என்று தொடங்கியது. 

மேலும், நம்பிக்கையில்லா தீர்மானத்தில் சபாநாயகருக்கு எதிராக வாக்களித்தால் அல்லது ராஜினாமா செய்தால் கோடிக்கணக்கில் பணம் தருவதாக பேரம் பேசியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டது. இந்தப் பேரத்தில் ரூ.35 கோடி வரை வழங்கப்படும் எனக் கூறப்பட்டதாகவும், மிரட்டல் கலந்த முயற்சிகளும் இருந்ததாகவும் எம்.எல்.ஏ. தெரிவித்தார். 

போலீசார் உடனடியாக விசாரணையைத் தொடங்கினர். இந்த விவகாரத்தில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டு இருந்த நிலையில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக கைதானவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் விசாரணை நடைபெற்று வருகிறது. 

இதையும் படிங்க: தூங்குதா சிங்கப்பெண் படை..? ஆட்சி லட்சணம் பல் இலிக்குது… முதல்வர் விஜயை கிழித்து தொங்கவிட்ட நயினார்..!!

செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகிய இருவருக்கும் முன் ஜாமின் கிடைத்தது. இருப்பினும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆட்சி கவிழ்ப்பு சதி விவகாரத்தில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். மதுரையைச் சேர்ந்த கணேசன், ரகு பிரகாஷ், சாமியப்பன் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதையும் படிங்க: “இதை செய்ய தவறினால்…” – சி.எம்.விஜய்க்கு வீரபாண்டியன் பகிரங்க எச்சரிக்கை… தவெகவுக்கு சிபிஐ வைத்த செக்…!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी