புதுச்சேரியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். அப்போது புதுச்சேரியில் பல்வேறு இடங்களிலும் அமித் ஷா வாக்கு சேகரித்தார். இன்னும் 3 நாட்களில் புதுச்சேரியில் தேர்தல் நடைபெற இருக்கிறது என்றார்.
புதுச்சேரியின் மண்ணாடிப்பட்டு என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: புதுச்சேரியில் இன்னும் 3 நாட்களில் தேர்தல் நடைபெற உள்ளது. பிரதமர் மோடியின் ஆட்சியை மீண்டும் புதுச்சேரியில் அமைக்க வேண்டும்.தேஜ கூட்டணியில் வெற்றி பெற செய்தால், மிகப்பெரிய இடத்திற்கு எடுத்துச் செல்வேன்.காங்கிரசின் நாராயணசாமி அரசு, புதுச்சேரியை பின்தங்கிய மாநிலமாக மாற்றியது. அதை சரிசெய்யவே 5 ஆண்டுகள் சரியாக இருந்தது.
புதுச்சேரியில் மீண்டும் என்டிஏ ஆட்சியை அமைக்க வேண்டும். என்டிஏ கூட்டணியை வெற்றி பெற செய்தால் புதுச்சேரியை உயர்ந்த இடத்திற்கு எடுத்துச் செல்ல முடியும். வளர்ச்சியை நோக்கி செல்ல வேண்டும் என்றால் மக்கள் என்டிஏ கூட்டணியை மக்கள் வெற்றி பெற செய்ய வேண்டும். புதுச்சேரியின் வெற்றி பாரதத்தின் வெற்றிக்கு மிக அவசியமானது. வேலைவாய்ப்பு முகாம்களை நமச்சிவாயம் வெற்றிகரமாக நடத்தியிருக்கிறார். இண்டியா கூட்டணியில் பதவிக்காக ஒருவருக்கொருவர் சண்டையிடும் நிலை ஏற்பட்டுள்ளது. தி.மு.க.- காங்கிரஸ் 5 தொகுதிகளில் எதிரெதிரே போட்டியிடுகிறது. புதுச்சேரியில் இண்டியா கூட்டணியில் ஒற்றுமையில்லை என கடுமையாக சாடினார்.
இதையும் படிங்க: தமிழகமே எதிர்பார்த்த கேள்வி...!! - “விஜய் வந்தா ஓட்டு போயிடும்...” - அடித்துச் சொன்ன அமித் ஷா...!
விவசாயிகள் உதவித்தொகை ரூ. 6000 லிருந்து ரூ 8000 ஆக உயர்த்தப்படும் என அறிவித்த அமித் ஷா, விவசாயத்தில் ஈடுபடும் பெண்களுக்கு ஒரு பசு.மாடு அல்லது இரு ஆடுகள் வழங்கப்படும். இப்படி எல்லாம் ஒவ்வொருத்துறையா பார்த்து வளர்ச்சி திட்டங்களை கொடுக்கிறோம், ஆனால் ராகுல் காந்தி இங்கு வந்து பாகிஸ்தான் பற்றி பேசி வருகின்றார். 9 ஆம் தேதி தாமரை சின்னத்தில் வாக்களிப்பீர்களா, ரங்கசாமி கரத்தை வலுப்படுத்தூர்களா, பிரதமர் மோடி கரத்யை உயர்த்துவிர்களா, இரு கரத்தையும் உயர்த்துங்க என்றவர், வணக்கம் என்று தமிழில் சொல்லி முடித்தார்.
தொடர்ந்து வேட்பாளர் நமச்சிவாயம் பேசுகையில், அமித்ஷா எனக்காக இங்கு வந்துள்ளார், வாழ்நாள் முழுவதும் மறக்காமல் விசுவாசமாக இருப்பேன் என்றார்.
கடந்த தேர்தலில் என்னை வாக்களித்து வெற்றி பெறச்செய்தீர்கள் அதனால் தான் மண்ணாடிப்பட்டு தொகுதியில் அனைத்து வசதிகள் செய்து கொடுத்துள்ளோம்.
டபுள் எஞ்சன் சர்க்கார் மூலம் அனைத்து திட்டங்களும் கொடுத்துள்ளன. திட்டங்கள் தொடர தேசிய ஜனநாயக கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்
இதையும் படிங்க: தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைக்கும்... எடப்பாடி தலையில் இடியை இறக்கிய அமித் ஷா...!