மாநிலம் முழுவதும் ஒவ்வொரு மாதமும் தமிழ்நாடு மின்சார வாரியம் மூலமாக பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் தற்போது கோடை காலம் ஆரம்பித்துள்ள நிலையில் பல்வேறு இடங்களில் பராமரிப்பு பணிகள் சீரமைக்கப் படுவது வழக்கம்.

அந்த வகையில் சென்னையில் நாளை மின் தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னையில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை110கி. வோ அலமாதி துணை மின் நிலையத்தில் கோடைகால மென் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக கூடுதலாக 10எம். வி. ஏ மின்மாற்றி நிறுவும் பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் விநியோகம் நிறுத்தப்படும்.
இதையும் படிங்க: POCSO Victim Protection order - பள்ளி மாணவிக்கு பாதுகாப்பு அளித்த சட்டம்!

மீண்டும் மாலை நான்கு மணிக்குள் பராமரிப்பு பணிகள் முடிவடைந்த உடன் மின்வினியோகம் வழக்கம் போல் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் நெடுஞ்சாலை, குருவாயல், அகரம், பூச்சி அத்திபேடு, மோரை, வெள்ளாளனூர், புது குப்பம், அயலச்சேரி, எருமை வெட்டிபாளையம், கீழ்கொண்டையூர், அரக்கம் கிராமம், கரல் பாக்கம் கிராமம், தாமரைப்பாக்கம் கிராமம், கதவூர் கிராமம், வேளச்சேரி, பாண்டீஸ்வரன் கிராமம், காரணி கிராமம்,
வாணியன்சத்திரம், ஆயில்ச்சேரி கிராமம், குருவாயில் கிராமம், பூச்சியத்திபேடு, கொடுவள்ளி கிராமம், ரெட்கில் சாலை, பால் பண்ணை சாலை, வேல் டெக் சாலை, கொள்ளு மேடு சாலை உள்ளிட்ட இடங்களில் நாளை மின்தடை செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளை முன்னதாகவே செய்து கொள்ளவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு என்ன?