பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 24 வயதான கௌரவ் குமார் என்பவர், தனது மனைவி முனிதா குமாரி மற்றும் அவர்களது 2 வயது குழந்தையுடன் சென்னைக்கு வேலை தேடி வந்திருந்தார். அவர் தரமணி பகுதியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் காவலாளியாக பணியாற்றி வந்தார்.இந்தக் குடும்பத்தினரை ஒரே நேரத்தில் கொலை செய்து, உடல்களை வெவ்வேறு இடங்களில் வீசிய சம்பவம் ஜனவரி 26 அன்று வெளிச்சத்துக்கு வந்தது.
அன்று காலை, சென்னை அடையாறு இந்திரா நகர் முதல் அவென்யூவில் உள்ள ஒரு இரு சக்கர வாகன ஷோரூம் அருகே சாலையோரத்தில் ஒரு சாக்கு மூட்டையில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த உள்ளூர் மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மூட்டையைத் திறந்து பார்த்த போலீசார், கௌரவ் குமாரின் சடலத்தைக் கண்டனர்.

தொடர்ந்து விசாரணை நடத்தியதில், கௌரவ் குமாருக்கு தெரிந்தவர்களான பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சிலரை கைது செய்தனர். சிக்கந்தர், நரேந்திர குமார், ரவீந்திரநாத் தாகூர், விகாஸ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். கௌரவ் குமாரின் மனைவி மற்றும் இரண்டு வயது குழந்தையையும் அவர்கள் கொலை செய்தது தெரியவந்தது. குழந்தையின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், இன்று கௌரகுமாரின் மனைவி உடலும் பெருங்குடி குப்பை கிடங்கில் இருந்து மீட்கப்பட்டது.
இதையும் படிங்க: “கூட்டணி குறித்த அறிவிப்பு பிப்ரவரி 3-ல் வெளியாகும்” - ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரேமலதா பேட்டி!
வட மாநில குடும்பத்தினர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினர் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், சென்னையில் பீகாரைச் சேர்ந்த குடும்பத்தினரை கொலை செய்தவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார். பிழைப்பிற்காக தமிழ்நாட்டுக்கு வந்தவர்களுக்கு நடந்த கொடுமை வேறு யாருக்கும் இனி நடக்க கூடாது என தெரிவித்தார்.
இதையும் படிங்க: "எங்க நின்னாலும் நான் ஜெயிப்பேன்!" - 2026 தேர்தல் களம் குறித்து விஜயபிரபாகரன் அதிரடி முழக்கம்!