• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கையில் பேப்பருடன் களமிறங்கிய பிரேமலதா விஜயகாந்த்... சி.எம். விஜய்க்கு கொடுத்த பெரும் ஷாக்...!

    பெண்கள்தான் இந்த நாட்டின் கண்கள் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.
    Author By Amaravathi Wed, 12 Aug 2026 11:36:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Premalatha vijayakanth about delimitation resolution

    தமிழக சட்டசபையில் இன்று 4வது நாளாக பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. இதில், தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு சட்டசபையில் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார். அப்போது பேசிய முதலமைச்சர் விஜய், "2026 மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுசீரமைக்கும்போது தமிழ்நாட்டின் தொகுதிகள் வெகுவாக குறையும்" என முதலமைச்சர் விஜய் பேசினார். மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையான 543-ஐ மாற்றக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
    இதையடுத்து இந்த தனித்தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

    தேமுதிக பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது: மத்திய அரசு இதுவரை தொகுதி மறுவரையறை தொடர்பான இந்த மசோதாவையோ, சட்ட முன்மொழிவையோ கொண்டு வரவில்லை. அப்படி இருக்கும்போது, நம் தமிழ்நாட்டில் அதை எந்த அடிப்படையில் கொண்டு வருவது சரியாக இருக்கும் என்பதை நான் கேட்கிறேன். ஏனென்றால், இதுவரை மத்திய அரசு எந்தச் சட்ட முன்வடிவையும் கொண்டு வரவில்லை.

    மக்கள் தொகை அடிப்படையில்தான் இந்தத் தொகுதி மறுவரையறை செயல்படுகிறது என்று நாம் நினைத்தால், இன்றைக்கு தமிழகத்தைவிட பல்வேறு மாநிலங்களில் மக்கள் தொகை அதிகமாக இருக்கிறது. மக்கள் தொகை அதிகமாக இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக தமிழ்நாட்டில் இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு இருக்கிறது.

    இதையும் படிங்க: "விவசாய கடன் தள்ளுபடி எங்கே?".. விஜய் அரசின் பட்ஜெட்டை கிழித்த பிரேமலதா!

    எனவே, மத்திய, மாநில அரசுகள் இரண்டும் கலந்து, அனைத்து மாநிலங்களுக்கும் 50 சதவீதம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்தும் வகையில் சமமாகக் கொண்டுவர வேண்டும். அப்போதுதான் தமிழ்நாட்டிலும் நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உயரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

    அதேபோல, 543 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்ற இடத்தில் 815 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது. இன்றைய நிலையில் தமிழ்நாட்டில் மொத்தம் 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருக்கிறார்கள். இந்தத் தொகுதி மறுவரையறையின் மூலம் கண்டிப்பாக தமிழ்நாட்டுக்கு 59 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.

    அந்த வகையில், 7.2 சதவீதம் என்ற நம்முடைய விகிதாச்சாரம் குறையாமல், நம்முடைய மக்களின் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு உறுதியாக நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்களால் முடியும்.

    இன்றைய நிலையில் 10 லட்சம் மக்களுக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற நிலை இருக்கிறது. இந்தத் தொகுதி மறுவரையறை செய்வதன் மூலம் 7 லட்சம் முதல் 8 லட்சம் மக்களுக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற விகிதம் ஏற்படும். அந்த வகையில், மக்களுக்குச் சிறப்பாக நிச்சயமாக நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணியாற்ற முடியும்.

    இப்போது 10 லட்சம் பேருக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் வேலை செய்வதற்கும், 7 லட்சம் முதல் 8 லட்சம் மக்களுக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் பணியாற்றுவதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. அந்த மக்கள் குறைகளை நேரடியாகக் கேட்டு, அதை நாடாளுமன்றத்தில் பேசி, தமிழ்நாட்டுக்கும் தமிழக மக்களுக்கும் அதன் மூலம் பல்வேறு விதமான திட்டங்களைக் கொண்டுவர முடியும்.

    எனவே, இந்த மக்கள் தொகை மறுசீரமைப்பில் உறுதியாக தமிழ்நாட்டுக்கு 59 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மேல் வரும்போது, 7 லட்சம் முதல் 8 லட்சம் மக்களுக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற விகிதம் ஏற்படுவது சிறப்பாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

    அதேபோல, பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை ஒரு பெண் அவை உறுப்பினராகவும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் பொதுச்செயலாளராகவும், ஒட்டுமொத்த பெண்கள் சார்பாகவும் நான் வரவேற்கிறேன்.

    ஏற்கனவே புரட்சிக் கலைஞர் கேப்டன் அவர்கள் இருந்தபோது, 33 சதவீத இடஒதுக்கீட்டிற்காக மாபெரும் பெண்கள் மாநாட்டை நடத்தி, பெண்களுக்காக ஒரு சீருடையை வழங்கி, பெண்களுக்கு மரியாதை கொடுத்தவர் இந்த அவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கேப்டன் அவர்கள்.

    அந்த வகையில், பெண்கள்தான் இந்த நாட்டின் கண்கள் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. இங்கே இருக்கின்ற ஒவ்வொரு உறுப்பினருக்கும் நிச்சயமாக பின்புலமாக இருப்பவர்கள் யார் என்றால், பெண்கள்தான்.

    அந்தப் பெண்கள் நிச்சயமாக அரசியலிலும் கோலோச்ச வேண்டும். இன்றைக்கு எல்லா இடங்களிலும் பெண்கள் வந்து மிகச் சிறப்பாகப் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது, அரசியலிலும் மிகப்பெரிய அளவில் பெண்களை ஊக்கப்படுத்தி வரும் நம்முடைய கட்சிகளுக்கு என்னுடைய நன்றிகளை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இந்த அவையிலும் அதிகமான பெண்கள் இருக்கிறார்கள். எனவே, முதலமைச்சர் அவர்களுக்கு நிச்சயமாக இந்த நேரத்தில் பெண்கள் சார்பாக நான் நன்றி சொல்லுகிறேன். மேலும், இந்த விகிதாச்சாரம் இன்னும் அதிகமாக வேண்டும் என்பதையும் இந்த நேரத்தில் கேட்டுக்கொள்கிறேன்.

    அந்த வகையில், பெண்களுக்கு 543 தொகுதிகளில் இருந்து 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கினால், மொத்தம் 179 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருவார்கள். அதற்கு மாறாக, 815 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற நிலையில் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கினால், 269 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருவார்கள்.

    நம்முடைய தமிழ்நாட்டைப் பார்த்தால், மொத்தமாக நாடாளுமன்றத்தில் 269 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரும்போது, பெண்களுக்கு கூடுதலாக 90 இடங்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.

    அதனால், நிச்சயமாக இந்த இரண்டு தீர்மானங்களிலுமே, முதலில் மத்திய அரசு சட்ட முன்வடிவைக் கொண்டு வர வேண்டும். அதற்குப் பிறகுதான் தொகுதி மறுவரையறை பற்றி நாம் ஆய்வு செய்தால் சிறப்பாக இருக்கும் என்ற என்னுடைய கருத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கி, நிச்சயமாக நமது தமிழ்நாட்டில் இந்த 39 நாடாளுமன்ற உறுப்பினர்களை 59 நாடாளுமன்ற உறுப்பினர்களாக உயர்த்தி, 7 லட்சம் முதல் 8 லட்சம் மக்களுக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் டெல்லிக்குச் சென்று தமிழ்நாட்டிற்காகக் குரல் கொடுக்கும்போது, நிச்சயமாக தமிழ்நாட்டை இன்னும் மிகப்பெரிய அளவில் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல முடியும்.

    மக்களுக்கும் மத்திய அரசின் மூலம் கிடைக்க வேண்டிய பணிகளையும், திட்டங்களையும் கொண்டுவர முடியும். மத்திய அரசின் மூலம் மாநில அரசும் நிச்சயமாக அந்தத் திட்டங்களைப் பெற்றுக்கொண்டு செயல்படுத்த முடியும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

    இதை என்னுடைய கருத்தாகத் தெரிவித்துக்கொண்டு, எனக்கு வாய்ப்பு கொடுத்த நமது மாண்புமிகு பேரவைத் தலைவருக்கு நன்றி கூறி அமருகிறேன் எனக்கூறினார். 

    இதையும் படிங்க: சி.எம். விஜய்க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இபிஎஸ்... சட்டப்பேரவையை தெறிக்கவிட்ட ‘அந்த’ ஒற்றை வார்த்தை...!

    மேலும் படிங்க
    போதைப்பொருள் புகாரளித்த மாணவர் படுகொலையா? கோவை சம்பவத்திற்கு டிடிவி தினகரன்  கண்டனம்!

    போதைப்பொருள் புகாரளித்த மாணவர் படுகொலையா? கோவை சம்பவத்திற்கு டிடிவி தினகரன்  கண்டனம்!

    தமிழ்நாடு
    ரீல்ஸ் உலகம் உங்களை ஏமாற்றிவிடும்! இளைஞர்களுக்கு பிரதமர் மோடி கொடுத்த ஸ்ட்ராங் அட்வைஸ்!

    ரீல்ஸ் உலகம் உங்களை ஏமாற்றிவிடும்! இளைஞர்களுக்கு பிரதமர் மோடி கொடுத்த ஸ்ட்ராங் அட்வைஸ்!

    இந்தியா
    சோதனைகளை வென்று சாதனை படைத்து முன்னேறுங்கள்! சர்வதேச இளைஞர் தினத்தில் முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

    சோதனைகளை வென்று சாதனை படைத்து முன்னேறுங்கள்! சர்வதேச இளைஞர் தினத்தில் முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

    தமிழ்நாடு
    விஜய் டிவியின் ‘காதல் காதல் காதல்’ சீரியல் நாயகியா இப்படி..!! கிளாமரில் கலக்கும் நடிகை ஷோபனா போட்டோஸ் வைரல்..!

    விஜய் டிவியின் ‘காதல் காதல் காதல்’ சீரியல் நாயகியா இப்படி..!! கிளாமரில் கலக்கும் நடிகை ஷோபனா போட்டோஸ் வைரல்..!

    சினிமா
    யூடியூப் வருமான விதிகளில் திடீர் மாற்றம்.. கண்டெண்ட் கிரியேட்டர்களுக்கு அதிர்ச்சி!

    யூடியூப் வருமான விதிகளில் திடீர் மாற்றம்.. கண்டெண்ட் கிரியேட்டர்களுக்கு அதிர்ச்சி!

    இந்தியா
    மக்கள் செல்வன் is back..!! மாஸான லுக்கில் மிரட்டும் டைட்டிலுடன் வெளியான போஸ்டர்.. குஷியில் விஜய்சேதுபதி Fan

    மக்கள் செல்வன் is back..!! மாஸான லுக்கில் மிரட்டும் டைட்டிலுடன் வெளியான போஸ்டர்.. குஷியில் விஜய்சேதுபதி Fan's..!

    சினிமா

    செய்திகள்

    போதைப்பொருள் புகாரளித்த மாணவர் படுகொலையா? கோவை சம்பவத்திற்கு டிடிவி தினகரன்  கண்டனம்!

    போதைப்பொருள் புகாரளித்த மாணவர் படுகொலையா? கோவை சம்பவத்திற்கு டிடிவி தினகரன்  கண்டனம்!

    தமிழ்நாடு
    ரீல்ஸ் உலகம் உங்களை ஏமாற்றிவிடும்! இளைஞர்களுக்கு பிரதமர் மோடி கொடுத்த ஸ்ட்ராங் அட்வைஸ்!

    ரீல்ஸ் உலகம் உங்களை ஏமாற்றிவிடும்! இளைஞர்களுக்கு பிரதமர் மோடி கொடுத்த ஸ்ட்ராங் அட்வைஸ்!

    இந்தியா
    சோதனைகளை வென்று சாதனை படைத்து முன்னேறுங்கள்! சர்வதேச இளைஞர் தினத்தில் முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

    சோதனைகளை வென்று சாதனை படைத்து முன்னேறுங்கள்! சர்வதேச இளைஞர் தினத்தில் முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

    தமிழ்நாடு
    யூடியூப் வருமான விதிகளில் திடீர் மாற்றம்.. கண்டெண்ட் கிரியேட்டர்களுக்கு அதிர்ச்சி!

    யூடியூப் வருமான விதிகளில் திடீர் மாற்றம்.. கண்டெண்ட் கிரியேட்டர்களுக்கு அதிர்ச்சி!

    இந்தியா
    மதுரை மீனாட்சியம்மன் கோயில் சொத்தை ஆட்டையைப் போட்ட விவகாரம்... துணை ஆட்சியருக்கு நேர்ந்த பரிதாபம்...!

    மதுரை மீனாட்சியம்மன் கோயில் சொத்தை ஆட்டையைப் போட்ட விவகாரம்... துணை ஆட்சியருக்கு நேர்ந்த பரிதாபம்...!

    தமிழ்நாடு
    4 நாட்கள் சட்டசபை விடுமுறை.. 17ம் தேதி தொடங்கும் மானியக் கோரிக்கை விவாதம்!!

    4 நாட்கள் சட்டசபை விடுமுறை.. 17ம் தேதி தொடங்கும் மானியக் கோரிக்கை விவாதம்!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share