தமிழ் சினிமாவின் தளபதி என்று அழைக்கப்படும் நடிகர் விஜய், தனது திரை வாழ்க்கையின் மூலம் தமிழக மக்களின் இதயங்களை கைப்பற்றியவர். ஆனால், அவரது அரசியல் பயணம் தொடங்கியபோது, அந்த ரசிகர்களின் அன்பு இன்னும் ஆழமான, உணர்ச்சிகரமான வடிவத்தை அடைந்தது. 2024 பிப்ரவரி 2 அன்று தமிழக வெற்றி கழகம் (த.வெ.க) என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கியபோது, விஜயின் ரசிகர்கள் அது வெறும் கட்சி அல்ல, அவர்களின் கனவுகளுக்கான ஒரு இயக்கம் என்று உணர்ந்தனர். இந்த அன்பு, வெறும் பட ரசிகர்களின் உற்சாகத்தைத் தாண்டி, அரசியல் அடிப்படை உருவாகி, ஆதரவு பெற்றுள்ளார்.
இதுவரை தேமுதிக தங்களது கூட்டணி குறித்து அறிவிக்கவில்லை. எனவே விஜய் கட்சியுடன் விஜயகாந்த் கட்சி கூட்டணி அமைக்க உள்ளது என தகவல் கசிந்தது. விஜயுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதா என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு விஜயுடன் எந்த கூட்டணி பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை என்று அவர் விளக்கம் அளித்தார். விஜய் முதலில் களத்திற்கு வரவேண்டும் என்று தெரிவித்தார். விஜய் முதலில் பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். விஜய் குறித்த கேள்விகளுக்கு அவர்தான் பதில் சொல்ல வேண்டும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: ரோட்ல உட்கார்ந்து பிச்சையா எடுக்க முடியும்? டென்ஷன் ஆகிட்டாரு போல... அண்ணாமலை ஆவேச பதில்...!
மேலும், தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணி தான் 2026 தேர்தலில் மகத்தான வெற்றி பெறும் என்று கூறினார் . தேமுதிகவில் இருப்பவர்கள் கட்டாயமாக சட்டமன்ற உறுப்பினர்களாகவும், அமைச்சரவையிலும் இடம்பெறுவார்கள் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா நம்பிக்கை தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாஜக பற்றி சேகர்பாபு பேச வேண்டிய அவசியமல்ல... நயினார் நாகேந்திரன் காட்டம்...!