2025 ஏப்ரல் மாதம், அண்ணாமலை தனது மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விலகினார். இந்த முடிவு, பாஜகவின் மத்திய தலைமையின் உத்தரவின் பேரில் எடுக்கப்பட்டதாகவும், அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைப்பதற்கு வசதியாக இந்த மாற்றம் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
அண்ணாமலையின் பதவி விலகலுக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுவது, பாஜகவும் அதிமுகவும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் மீண்டும் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை. 2023 ஆம் ஆண்டு, அண்ணாமலை, அதிமுகவின் முன்னாள் தலைவர்களான ஜெ. ஜெயலலிதா மற்றும் சி.என். அண்ணாதுரை ஆகியோரை விமர்சித்தது, இரு கட்சிகளுக்கிடையே பிளவை ஏற்படுத்தியது.

தமிழக பாஜக தலைவர் பதவி என்பது மியூசிக்கல் சேர் போன்றது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விமர்சித்து உள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கு பிறகு அண்ணாமலைக்கு அரோகரா போட்டது பாஜக தலைமை என்ற தெரிவித்தார். சட்டமன்றத் தேர்தலில் ஏற்படும் தோல்வியால் நயினார் நாகேந்திரனை PACK செய்ய டெல்லி தயாராகும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழகமே பரபரப்பு... ஒரே நேரத்தில் 3 அமைச்சர்கள் வீடுகளுக்கு பறந்த போலீஸ் படை...!
அமைச்சர் சேகர்பாபு விமர்சனத்திற்கு நயினார் நாகேந்திரன் பதிலடி கொடுத்தார். டிடிவி, ஓபிஎஸ்ஸை NDA-வில் இணைப்பது பற்றி காலம் தான் முடிவு செய்யும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சேகர்பாபு சொல்வது உண்மைதான் என்றும் பாஜகவில் 3 ஆண்டுகள் தான் பதவி எனவும் தெரிவித்தார். 3 ஆண்டுகளுக்கு பின் ஒரு வேளை பதவி நீட்டிக்கப்படலாம் என நயினார் நாகேந்திரன் கூறினார். திமுகவை சேர்ந்த சேகர்பாபு பாஜகவை பற்றி பேச வேண்டியதில்லை என்றும் தெரிவித்தார். நடிகர் விஜயின் தவெகவை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை என்றும் கூறினார்.
இதையும் படிங்க: பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்... இன்று கோயில்களில் அசத்தல் திட்டம் அறிமுகம்..!