திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி தனியார் கல்லூரி பேராசிரியையை உதகைக்கு இன்ப சுற்றுலா அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்த உடற்கல்வி இயக்குனர் கைது செய்யப்பட்டார்.
கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் குமரேசன் (வயது 33). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் உடற்கல்வி இயக்குனராக பணியாற்றி வருகிறார். அதே கல்லூரியில் பணியாற்றும் சுமார் 30 வயது மதிக்கத்தக்க பேராசிரியை ஒருவருடன் அவருக்கு அறிமுகம் ஏற்பட்டு நாளடைவில் அவர்களுடைய பழக்கம் காதலாக மாறியுள்ளது. இருவரின் வீட்டுக்கு தெரியாமல் காதல் ஜோடியாக பல இடங்களுக்கும் சென்று வந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து உடற்கல்வி ஆசிரியர், அந்தப் பேராசிரியையை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊட்டிக்கு இன்பச் சுற்றுலா அழைத்து வந்துள்ளார்.. ஊட்டியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து ஒன்றாக தங்கி உள்ளனர். இதைத்தொடர்ந்து திருமணம் செய்து கொள்வதாக கூறி பேராசிரியை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதையும் படிங்க: இன்று முதல் உதகைக்கு செல்ல தடை.. சுற்றுலா பயணிகளுக்கு செம்ம ஷாக்.. வனத்துறை அதிரடி..!
இதன் பின்னர் இருவரும் கோவைக்கு திரும்பி விட்டனர். இந்த நிலையில் திருமணத்திற்காக குமரேசனுக்கு வீட்டில் பெண் பார்க்கும் ஏற்பாடுகள் ஜரூராக நடைபெற்று வந்த. நிலையில் குமரேசனும் திருமண வரனுக்கு ஆர்வமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கேள்விப்பட்ட பேராசிரியை அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் இது குறித்து குமரேசன் இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டை போட்டுள்ளார். ஆனால் குமரேசன் சரியான காரணத்தை தெரிவிக்கவில்லை. உடற்கல்வி ஆசிரியர் குமரேசனும், பேராசிரியையும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதால் இந்த திருமணம் நடைபெறாது என்று குமரேசன் கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பேராசிரியை இது குறித்து கோவை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவம் உதகையில் நிகழ்ந்ததால் இந்த வழக்கு ஊட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்க்கு நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து காவல் கண்காணிப்பாளர் பிருந்தா உத்தரவின் பேரில் ஆய்வாளர் நித்தியா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி பாலியல் வன்கொடுமை சட்டம் மற்றும் எஸ்சி எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து குமரேசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குமரேசனை சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ஆவின் பால் நஷ்டத்தில் இயங்குவது ஏன்? சாட்டையை சுழற்றும் முதல்வர் விஜய்! புதிய திட்டம் தொடக்கம்!