• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தவெகவிற்கு கிரீன் சிக்னல்... விஜய் பாணியில் குட்டி ஸ்டோரி சொன்ன ராகவா லாரன்ஸ்...இதை கவனிச்சீங்களா?

    முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் பாணியில் நடிகர் ராகவா லாரன்ஸ் சொன்ன குட்டிக்கதை இணையத்தில் வைரலாகி வருகிறது. 
    Author By Amaravathi Fri, 12 Jun 2026 11:03:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Raghava lawrance says kutty story

    முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் பாணியில் நடிகர் ராகவா லாரன்ஸ் சொன்ன குட்டிக்கதை இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    ராகவா லாரன்ஸ் காணொளி காட்சியில் பேசியதாவது: “கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே” என்ற பகவத் கீதையின் ஸ்லோகம் எனக்கு மிகவும் பிடித்தமானது. ஆனால் இந்த ஸ்லோகத்தைப் பற்றி பலருக்கும் ஒரு சந்தேகம் இருக்கும். “நாம் வேலை செய்கிறோம்; அதற்கான கூலியையோ சம்பளத்தையோ எதிர்பார்க்கக் கூடாதா?” என்பதே அந்தக் கேள்வி. அந்த ஸ்லோகத்தின் உண்மையான பொருளை ஒரு சிறிய கதையின் மூலம் விளக்க விரும்புகிறேன்.

    ஒரு பெரிய பணக்காரரின் வீட்டில் அவரது அறையை சுத்தம் செய்வதற்காக இரண்டு பணியாளர்கள் இருந்தனர். ஒருவர் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட வேலையை மட்டும் கவனமாகச் செய்து கொண்டிருப்பார். மற்றொருவர் வேலை செய்வதை விட, வீட்டின் உரிமையாளரைப் புகழ்ந்து கொண்டே இருப்பார்.

    இதையும் படிங்க: அரசியல் என்ட்ரி கன்பார்ம் ஆனால்... மெகா ட்விஸ்ட் வைத்த ராகவா லாரன்ஸ்... வீடியோவில் பேசியது என்ன?

    “சார், உங்கள் உடை அருமையாக இருக்கிறது. கண்ணாடி நன்றாக இருக்கிறது. நீங்கள் பயன்படுத்தும் வாசனைத் திரவியம் மிகவும் சிறப்பாக இருக்கிறது” என்று எப்போதும் புகழ்ந்து பேசிக் கொண்டிருப்பார். ஆனால் மற்றவர் “வணக்கம் சார்” என்று கூறிவிட்டு, தன்னுடைய வேலையை மட்டும் கவனமாகச் செய்து முடிப்பார்.

    இப்படியே நாட்கள் சென்றன. ஒருநாள் அந்த வீட்டின் உரிமையாளர் வேறு ஊருக்கு செல்ல முடிவு செய்தார். செல்லும் முன் இருவரையும் அழைத்தார். எப்போதும் தன்னைப் புகழ்ந்து பேசிய பணியாளருக்கு ஒரு மாத கூடுதல் சம்பளத்தை வழங்கினார். ஆனால் தனது வேலையை மட்டும் நேர்மையாகச் செய்த பணியாளருக்கு ஒரு வீட்டை வாங்கிக் கொடுத்து, “நீ என்னுடன் வா” என்று அழைத்துச் சென்றார்.

    இதைக் கண்டு முதல் பணியாளர் ஆச்சரியப்பட்டு, “சார், நான்தானே எப்போதும் உங்களுடன் இருந்தேன்; உங்கள் பையைத் தூக்கினேன்; உங்களைப் பாராட்டினேன். எனக்கு ஏன் இவ்வளவு சிறிய பரிசு?” என்று கேட்டார். அதற்கு அந்த உரிமையாளர், “நான் கொடுத்த வேலையை நீ சரியாகச் செய்யவில்லை. என்னைப் புகழ்வதிலேயே உன் நேரம் சென்றது. ஆனால் அவன் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட வேலையை மட்டும் முழுமையாகச் செய்தான். தனது கடமையை நேர்மையாக நிறைவேற்றினான். அதற்கான பலனை நான் கொடுத்துள்ளேன்” என்று பதிலளித்தார்.

    இதுதான் அந்த ஸ்லோகத்தின் உண்மையான பொருள். வேலைக்கான சம்பளத்தை எதிர்பார்க்கக் கூடாது என்பதல்ல. நாம் செய்யும் கடமையில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். பலனைப் பற்றிய கவலைகளில் மூழ்காமல், நம் பொறுப்பை நேர்மையாகச் செய்தால், அதற்கான பலன் தானாகவே கிடைக்கும் என்பதே அதன் சாராம்சம்.

    இப்போது என்னுடைய வாழ்க்கையைப் பற்றி பேசுகிறேன். நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று திட்டமிட்டு வரவில்லை. என் வீட்டுப் பொறுப்புகளை கவனித்துக் கொண்டே சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்தேன். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவது, குழந்தைகளின் கல்விக்காக உதவுவது, திறந்த இதய அறுவை சிகிச்சைக்கு உதவி செய்வது, விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவு அளிப்பது போன்ற பல சமூகச் செயல்பாடுகளில் என்னால் முடிந்தவரை ஈடுபட்டேன். என்னால் முடியாதபோது மற்றவர்களிடம் உதவி கேட்டு அந்த பணிகளைச் செய்து வந்தேன்.

    அந்த காலகட்டத்தில்தான் ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்றது. குழந்தைகளுக்கான உணவு ஏற்பாடுகள் உள்ளிட்ட உதவிகளைச் செய்ய நான் அங்கு சென்றேன். அந்தப் போராட்டம் எவ்வாறு நடைபெற்றது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

    அதன்பிறகு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் என்னைப் பற்றி விமர்சனம் செய்தார். அதற்கு நான் பதிலளித்தேன். மீண்டும் அவர் பதிலளித்தார். அந்த விவாதங்களின் மூலம்தான் அரசியல் என்னுடைய வாழ்க்கைக்குள் நுழைந்தது. ஜல்லிக்கட்டு போராட்டம் எனக்கு அரசியலின் தாக்கத்தையும் அதன் பரவலையும் உணர்த்தியது.

    அதேபோல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்ற பேச்சுகள் அதிகரித்தபோது, அவரைப் பற்றி பலரும் விமர்சிக்கத் தொடங்கினர். ரஜினிகாந்த் எனக்கு மிகவும் மதிப்பிற்குரியவர். அவர் எனக்கு ஒரு வழிகாட்டி, ஒரு அண்ணன், ஒரு தந்தை போன்றவர்.

    அவரைப் பற்றி தொடர்ந்து விமர்சனங்கள் வந்தபோது, ஒருமுறை அவருக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு, “உங்களைப் பற்றி மிகவும் அதிகமாகப் பேசுகிறார்கள்” என்று கூறினேன். அதற்கு அவர் அமைதியாக இருக்கும்படி அறிவுறுத்தினார்.

    பின்னர் ஒரு ஆடியோ வெளியீட்டு விழாவில், என் மனதில் இருந்த எண்ணங்களை வெளிப்படையாகப் பகிர்ந்தேன். அதன் பின்னரும் ரஜினிகாந்த் தொடர்பான ஒரு நிகழ்ச்சியில் இதுகுறித்து பேசினேன். அந்த வீடியோக்கள் பலராலும் பார்க்கப்பட்டன; அவை சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டன என்றார். 

    இதையும் படிங்க: “ஒரே அசிங்கமா போச்சி குமாரு...” - முதலமைச்சர் முன்னிலையில் நடந்த அவமதிப்பு... தமிழ் வளர்ச்சித்துறை எடுத்த அதிரடி முடிவு...!

    மேலும் படிங்க
    ராஜினாமா செய்து தவெகவுக்கு தாவிய எம்.எல்.ஏ-க்கள்! விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ்! 7 நாள் கெடு!

    ராஜினாமா செய்து தவெகவுக்கு தாவிய எம்.எல்.ஏ-க்கள்! விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ்! 7 நாள் கெடு!

    அரசியல்
    ரூ. 134 கோடிக்கு சிறப்பு தொகுப்பு ஏமாற்று அறிவிப்பு! காவிரி நீர் திறக்காத பொய்க்கால் குதிரை அரசு! இபிஎஸ் கண்டனம்!

    ரூ. 134 கோடிக்கு சிறப்பு தொகுப்பு ஏமாற்று அறிவிப்பு! காவிரி நீர் திறக்காத பொய்க்கால் குதிரை அரசு! இபிஎஸ் கண்டனம்!

    அரசியல்
    பட்டா மாறுதலுக்கு 5 நாட்களுக்குள் பரிசீலனை! 15 நாளில் நடவடிக்கை! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

    பட்டா மாறுதலுக்கு 5 நாட்களுக்குள் பரிசீலனை! 15 நாளில் நடவடிக்கை! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

    அரசியல்
    சிங்கப்பெண் அதிரடிப்படையை இழிவுபடுத்திய கூல் சுரேஷ்..!! சரமாரி கேள்வியால் ஓட்டம்.. வலுக்கும் கண்டனம்..!

    சிங்கப்பெண் அதிரடிப்படையை இழிவுபடுத்திய கூல் சுரேஷ்..!! சரமாரி கேள்வியால் ஓட்டம்.. வலுக்கும் கண்டனம்..!

    சினிமா
    ஏ ப்ளஸ் ரவுடிக்கு காங்கிரஸில் மாநில பதவி?! ஆர்.டி.ஐ., பிரிவு துணை தலைவராக நியமித்ததால் அதிர்ச்சி!

    ஏ ப்ளஸ் ரவுடிக்கு காங்கிரஸில் மாநில பதவி?! ஆர்.டி.ஐ., பிரிவு துணை தலைவராக நியமித்ததால் அதிர்ச்சி!

    அரசியல்
    10 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்!  ஹார்முஸ் வழியாக எடுத்து வந்தோம்! ரகசியத்தை போட்டு உடைத்த ட்ரம்ப்!

    10 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்! ஹார்முஸ் வழியாக எடுத்து வந்தோம்! ரகசியத்தை போட்டு உடைத்த ட்ரம்ப்!

    உலகம்

    செய்திகள்

    ராஜினாமா செய்து தவெகவுக்கு தாவிய எம்.எல்.ஏ-க்கள்! விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ்! 7 நாள் கெடு!

    ராஜினாமா செய்து தவெகவுக்கு தாவிய எம்.எல்.ஏ-க்கள்! விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ்! 7 நாள் கெடு!

    அரசியல்
    ரூ. 134 கோடிக்கு சிறப்பு தொகுப்பு ஏமாற்று அறிவிப்பு! காவிரி நீர் திறக்காத பொய்க்கால் குதிரை அரசு! இபிஎஸ் கண்டனம்!

    ரூ. 134 கோடிக்கு சிறப்பு தொகுப்பு ஏமாற்று அறிவிப்பு! காவிரி நீர் திறக்காத பொய்க்கால் குதிரை அரசு! இபிஎஸ் கண்டனம்!

    அரசியல்
    பட்டா மாறுதலுக்கு 5 நாட்களுக்குள் பரிசீலனை! 15 நாளில் நடவடிக்கை! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

    பட்டா மாறுதலுக்கு 5 நாட்களுக்குள் பரிசீலனை! 15 நாளில் நடவடிக்கை! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

    அரசியல்
    ஏ ப்ளஸ் ரவுடிக்கு காங்கிரஸில் மாநில பதவி?! ஆர்.டி.ஐ., பிரிவு துணை தலைவராக நியமித்ததால் அதிர்ச்சி!

    ஏ ப்ளஸ் ரவுடிக்கு காங்கிரஸில் மாநில பதவி?! ஆர்.டி.ஐ., பிரிவு துணை தலைவராக நியமித்ததால் அதிர்ச்சி!

    அரசியல்
    10 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்!  ஹார்முஸ் வழியாக எடுத்து வந்தோம்! ரகசியத்தை போட்டு உடைத்த ட்ரம்ப்!

    10 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்! ஹார்முஸ் வழியாக எடுத்து வந்தோம்! ரகசியத்தை போட்டு உடைத்த ட்ரம்ப்!

    உலகம்
    தமிழகத்தில் உள்ள மதுக்கடைகள் எண்ணிக்கை எத்தனை?! மூடப்பட்ட கடைகள் எவ்வளவு? பதிலளிக்க டாஸ்மாக் மறுப்பு!

    தமிழகத்தில் உள்ள மதுக்கடைகள் எண்ணிக்கை எத்தனை?! மூடப்பட்ட கடைகள் எவ்வளவு? பதிலளிக்க டாஸ்மாக் மறுப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share