காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி வரும் ஜூலை 21-ம் தேதி தமிழகம் வருகை தர உள்ளார். இந்த வருகை தமிழக அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. தற்போதைய சூழலில் தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணி அரசு நடைபெறும் நிலையில், காங்கிரஸ் கட்சியுடன் உள்ள உறவுகளை வலுப்படுத்தும் வகையில் இந்த சந்திப்பு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தே.வெ.க. தலைவர் சி. ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி அவரது அரசில் இணைந்துள்ளது. இந்த நிலையில் வரும் 21ஆம் தேதி கட்சி நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக வரும் 21ஆம் தேதி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சென்னை வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக காங்கிரஸின் மாவட்ட தலைவர்களை காண 10 நாட்கள் பயிற்சி கூட்டம் வரும் 21ஆம் தேதி முதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸின் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று ஆலோசனைகளை வழங்கு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கொம்பு சீவி விட்டு அன்புமணியை பாராட்டிய அமித் ஷா!! ராகுல்காந்தியை வச்சு செய்யும் பாமக!! திரைமறைவு ஆட்டம்?
தமிழ்நாட்டுக்கு வரும் ராகுல் காந்தி முதல்வர் விஜய் சந்தித்து ஆலோசிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முதல்வர் விஜயின் பதவியேற்பு உள்ளிட்ட நிகழ்வுகளில் ராகுல் காந்தி பங்கேற்று வந்த நிலையில் மீண்டும் அவர் தமிழகம் வருவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதையும் படிங்க: ராகுல்காந்திக்கு பயம்?! ரயில்வே அமைச்சர் மீது சந்தேகம்! ரயிலை தவிர்த்து விமானத்தில் பறந்தார்!