இந்தியாவின் மூன்று மாநிலங்களை ஒரே நேரத்தில் குறி வைத்து பாகிஸ்தான் தற்போது ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இந்திய பகுதிக்கு வர முயன்ற பாகிஸ்தானின் மூன்று போர் விமானங்களை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தின. வான்வழி தாக்குதல் மட்டுமல்லாது தரைவழி தாக்குதலும் இந்தியா பாகிஸ்தான் இடையே தொடங்கியுள்ளது. பூஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் தீவிர தாக்குதல் நடத்தி வரும் நிலையில் எல்லையோர மாவட்டங்களில் ஒட்டுமொத்தமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த நிலையில் முப்படை தலைமை தளபதி மற்றும் படைத் தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். எல்லைப் பகுதியில் நடக்கும் தாக்குதல் சம்பவம் தொடர்பாகவும், இந்தியா பதிலடி கொடுப்பது தொடர்பாகவும், பொதுமக்களின் பாதுகாப்பு நிலை தொடர்பாகவும், முப்படைகளின் தயார் நிலை குறித்தும் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது..