பாமக இரண்டாக உடைந்து ராமதாஸ் ஒரு பக்கமும் அன்புமணி ஒரு பக்கமும் என கட்சியை நடத்திக் கொண்டு வருகின்றனர். தொண்டர்கள் துண்டாடப்பட்டு யாரை ஆதரிப்பது என்பது தெரியாமல் அல்லாடி வருகின்றனர். செயற்குழு, பொதுக்குழு கூட்டங்கள், சுற்றுப்பயணம் என தனித்தனியாக நடத்தி வருகின்றனர். தந்தைக்கும் மகனுக்குமான பனிப்போர் முற்றி மோதல் நிலவி வருகிறது. இன்னும் அவை ஓய்வதாக தெரியவில்லை. இருவரும் மாறி மாறி குறை கூறி வருகின்றனர்.
இருப்பினும் நல்ல செய்தி வரும் என்ற அடிக்கடி ராமதாஸ் கூறுவதை பார்த்து இருவரும் சேர்ந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கும் சூழ்நிலையில், மீண்டும் மீண்டும் நிகழும் சில சம்பவங்கள் அவற்றை பிரதிபலிப்பாகவே தெரியவில்லை என்கிறார்கள் விமர்சகர்கள். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசினார். அப்போது பாமக தலைமை அலுவலகம் தைலாபுரத்திற்கு மாற்றப்படுவதாக தெரிவித்துள்ளார்.

புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டது என்றும் புதிய நிர்வாகிகளை பணி செய்யவிடாமல் தடுத்தால் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும் ராமதாஸ் எச்சரித்தார். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும் என தெரிவித்த அவர், அன்புமணியின் பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது என ஏற்கனவே கூறிவிட்டேன் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: #BREAKING உரிமை மீட்பு பயணத்திற்கு சிக்கல்... அன்புமணிக்கு ராமதாஸ் வைத்த செக் - அதிரும் அரசியல் களம்...!
அன்புமணியின் சுற்றுப்பயணத்தை காவல்துறை தடை செய்ய வேண்டும், அவரது சுற்றுப்பயணத்தால் வட தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட வாய்ப்புள்ளது என வலியுறுத்திய அவர், இதுவரை எந்த தலைவருக்கும் இல்லாத விதமாக தங்களிடத்தில் ஒட்டுக்கேற்ப கருவி வைத்திருக்கிறார்கள் என்றும் கூறினார். அதை யார் வைத்தார்கள் என்பது பெரும் கேள்விக்குறியாக இருக்கிறது என்றும் அதை யார் வைத்தார்கள் என்று தனக்குத் தெரியும் எனவும் தெரிவித்தார். விசாரணை பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தான் அது பற்றி தெரிவிக்க விரும்பவில்லை என்றார்.
இதையும் படிங்க: உங்களுடன் ஸ்டாலின் இல்ல! ஊழலுடன் ஸ்டாலின் தான்... லெப்ட் ரைட் வாங்கிய அன்புமணி..!