ராமேஸ்வரம் அடுத்த மல்லிகா நகர் பகுதியை சேர்ந்த மரியமலர் பிளாடின் வயசு 46 இவர் கணவர் ஜோசப் ஆரோக்கியம் ஆகிய இருவரும் வீட்டிற்கு தேவையான அத்தியாயம் பொருட்களை வாங்கிக் கொண்டு தனது பகுதிக்கு சாலை நடந்து சென்றுள்ளார். இதை அடுத்து சாலை ஓரத்தில் அடையாளம் தெரியாத இளைஞர்கள் மது அருந்தி கொண்டிருந்தாக கூறப்படுகிறது.
இதை அடுத்து அடையாளம் தெரியாத நான்கு நபர்கள் ஜோசப் ஆரோக்கியத்தை தள்ளிவிட்டு மரியமலர் பிளாடின் தனியாக பெண்ணிற்கு பாலியல் சீண்டல் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து பாதிக்கப்பட்ட பெண் அலறடித்துக் கொண்டு நான்கு பேரிடமிருந்து தப்பித்து ஓடி வந்ததாக கூறப்படுகிறது.
இதை அடுத்து நான்கு இளைஞர்களிடம் இருக்கு தப்பித்து வந்த இளம் பெண் சிறிது நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ச்சீ… மனுஷங்களா நீங்க? கணவன் கண்ணெதிரே மனைவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்…!
இதை அடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் நான்கு பேரில் இரண்டு பேரைப் பிடித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அந்த விசாரணையின் போது, அந்த பெண்ணை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்யும் எண்ணத்தோடு நாங்க நடந்து கொள்ளவில்லை. தங்கள் பகுதியில் புதிதாக இரண்டு தம்பதிகள் அவங்க எந்த பகுதியை சேர்ந்த விசாரணை நடத்திய போது, தம்பதிகளுக்கும் இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. வேறு எந்த ஒரு எண்ணத்திலும் அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ளவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு, நெல்லை அரசர் குளம் பகுதியில் தனியார் ஹாலோ பிளாக் தயாரிக்கும் நிறுவனத்திற்கு வேலைக்கு வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியை வேறு வேலைக்குச் செல்லக்கூடாது என ஹாலோ பிளாக் நிறுவன உரிமையாளர், அவரது ஓட்டுநர் உள்ளிட்ட மூவர் மிரட்டியுள்ளனர். அந்த தம்பதியைக் காட்டுக்குள் அழைத்துச் சென்று கணவன் கண் முன்பே மனைவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீள்வதற்குள்ளாகவே ஆன்மீக பூமியான ராமேஸ்வரத்தில் கணவனுடன் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை கொடுக்கப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நெஞ்சே பதறுதே..!! வக்கிரத்தின் உச்சம்... அந்தரங்க உறுப்பில் இரும்பு கம்பி... 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்...!