தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழ்நாட்டில் நடந்த அனைத்து குற்ற சம்பவங்களுக்கும் அரசுதான் முழு பொறுப்பு என ஊருக்கு, ஊர் சென்று விசில் ஊதிய விஜய். தற்போது தவெக ஆட்சியில் விஜய முதல்வராக பொறுப்பேற்ற பின்பு நடக்கின்ற குற்ற சம்பவங்களுக்கு அரசு பொறுப்பு அல்ல மக்கள்தான் பொறுப்பு என அரசின் பொறுப்பை தட்டிக் கழிக்கிறார். குற்றங்களை தடுக்கின்ற காட்டுகின்ற அக்கறை விட, குற்ற சம்பவங்களின் காரணங்களை முன்வைத்து நியாயப்படுத்த விஜய் முயற்சிப்பது சட்ட ஒழுங்கை மிகப் பெரிய அளவில் கேள்விக்குறியாக்கும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டு
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில், காவல்துறை மீதான மானிய கோரிக்கைக்கு முதல் மறையாக முதல்வர் விஜய் பதிலளித்து பேசியதை பார்க்கின்ற பொழுது,சட்டம் ஒழுங்கு குறித்து முதலமைச்சர் கடந்த கால நிலைப்பாட்டையும் ,ஆட்சி பொறுப்பை ஏற்று முதலமைச்சராக அமர்ந்தவுடன் தலைகீழாக தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டாரோ சந்தேகமும் அச்சமும் ஏற்படுகிறது.
ஒரு குற்றம் நடந்து விட்டது என்பதாலேயே ஒட்டுமொத்த மாநிலத்தின் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என்று சொல்ல முடியாது என்று முதல்வர் பதில் அளித்தார். தனிப்பட்ட குற்ற சம்பவங்களுக்கும்,மாநிலத்தின் சட்ட ஒழுங்கு சம்பவங்களுக்கும் வேறுபாடு உள்ளது ஒரு குற்றம் நடந்த பின்பு அதற்கான பொறுப்பை அரசு மீது சுமத்தி மற்றவர்கள் ஒதுங்கி விட முடியாது என்று பதிலளித்தார்.
இதையும் படிங்க: குழாய் அடி சண்டையில் விஜய் - ராகுல்... 10 ஆண்டுகளுக்கு பின்னோக்கி போகும் தமிழக பொருளாதாரம்... ஆர்.பி.உதயகுமார் விளாசல்...!!
அனைத்து குற்றங்களும் கடந்த 100 நாட்களில் தோன்றியது அல்ல, ஒவ்வொரு குற்றத்திற்கு பின்னும் குடும்பப் பிரச்சனை, சொத்த தகராறு, முன் விரோதம், போதை பொருள்
எல்லாம் இவைகளின் தாக்கமாக இருக்கலாம் என்று குற்றங்களுக்கு காரணங்களை அவர் அடுக்கிய போது அதனுடைய பின் விளைவுகளை அவர் சொல்ல மறுந்து விட்டார் .
கடந்த காலம் ஏற்பட்ட சட்டங்கள் மீது பயம் இல்லாத நிலை, சிலரின் ஆதிக்கத்தில் காவல்துறை,சமூக கட்டுப்பாடு குறைந்த ஜாதி அடையாளம் அதிகாரத்தின் மீதான போட்டி, கலப்பு திருமணத்திற்கு எதிர்ப்பு, உள்ளூர் அதிகார போட்டி, அரசியல் பொருளாதாரம் ஆதிக்கம், சமூக வலைதளங்களின் தாக்கம் போன்றவை குற்றங்களுக்கு பின்னணியாக இருக்கலாம் என்று குற்றங்களுக்கு ஏற்படுகின்ற அந்த காரணிகளை அடுக்கிச் சொன்னார்.
அதோடு அவர் சொன்ன சில முக்கிய தகவல்களாக 21ம் நூற்றாண்டில் குற்றங்களை 20 ஆம் நூற்றாண்டின் காவல் முறையால் எதிர்கொள்ள முடியாது என்று அவர் சொல்வது அதிர்ச்சி அளிக்கக் கூடிய உள்ளது.
குற்றத்தை பார்க்கும் பார்வையிலே மாற்றம் வேண்டும் என்று மேலும் வலியுறுத்தியதும் நமக்கு அதிர்ச்சியாக அளிக்கிறது.
இதில் குறிப்பாக முதலமைச்சருக்கு நினைவூட்டுவது என்னவென்றால், தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழ்நாட்டில் நடந்த அனைத்து குற்ற சம்பவங்களுக்கும் ,சட்டம் ஒழுங்கு சம்பவங்களுக்கும் அரசுதான் முழு பொறுப்பு என ஊருக்கு, ஊர் சென்று விசில் ஊதிய விஜய் தற்போது தவெக ஆட்சியில் முதல்வராக பொறுப்பேற்ற பின்பு நடக்கின்ற குற்ற சம்பவங்களுக்கு அரசு பொறுப்பு அல்ல மக்கள்தான் பொறுப்பு என அரசின் பொறுப்பை தட்டிக் கழிப்பதோடு, குற்றங்களை தடுக்கின்ற காட்டுகின்ற அக்கறை விட, குற்ற சம்பவங்களின் காரணங்களை முன்வைத்து நியாயப்படுத்த விஜய் முயற்சிப்பது சட்ட ஒழுங்கை மிகப் பெரிய அளவில் கேள்விக்குறியாக்கும் என்பதுதான் நேற்றைய சட்டசபை நேரலையை பார்த்த மக்கள் அனைவருக்கும் மிகப்பெரிய கவலையாக இருக்கிறது .
ஆகவே முதலமைச்சர் அரியணையில் அமருவதற்கு முன்பு முதலமைச்சர் அவர்கள் சட்ட ஒழுங்கு குறித்து தன்னுடைய நிலைப்பாட்டை, முதல்வர் அரியணையில் அமர்ந்த பின்பு அந்த பொறுப்பை தட்டி கழிக்கிறாரோ நியாயப்படுத்துகிறாரோ ?
குற்ற சம்பவங்கள் இன்றைக்கு நடைபெறுவதற்கு தவெக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று இன்றைக்கு முன்வைக்கின்ற அந்த குற்றச்சாட்டுகளுக்கு உரிய தீர்வு காண்பதற்கு பதிலாக அதை மடைமாற்றம் செய்கின்ற வகையில் இதற்கு அரசு மற்றும் பொறுப்பு ஏற்க முடியாது என்பதை ஒரு தோரணையில் அவர் சொன்னாலும், இந்த பொறுப்பை அவர் தட்டிக் கழித்து நடைபெறுகின்ற குற்ற சம்பவங்களை அரசு பொறுப்பேற்க முடியாதோடு, அதை நியாயப்படுத்தும் ஒரு சூழ்நிலையை அவர் பதிலுரை நமக்கு சொல்கிறதா என்கிற கவலை நமக்கு ஏற்படுகிறது.
எது எப்படியோ முற்றிலுமாக தன்னுடைய நிலைப்பாட்டை தலைகீழாக மாற்றிக் கொண்டாரா? விவசாயிகளின் நிலைப்பாட்டிலும் சரி, தேர்தல் வாக்குறுதிகளில் அவர் கொடுத்த நிறைவேற்றிலும் சரி, அதே போல சட்ட ஒழுங்கில் அவர் முன் வைத்ததும் சரி, லாக்கப் மரணம் குறித்து தேர்தலுக்கு முன்பு அவர் நிலைப்பாடு ,தேர்தலுக்கு பின்பு என்கின்ற நிலையை பார்க்க முடிகிறது அவர் உணர்கிறார் அல்லது உணரவில்லையா என்பது நமக்கு தெரியவில்லை.
ஆனால் முதல்வர் நிலைப்பாடு தேர்தலுக்கு முன்பு ஆட்சி அதிகாரத்திற்காக அந்த முன்வைத்த வாதங்களை எல்லாம் முன்வைத்த கோரிக்கைகள் சிந்தனைகள் கேள்விகள் குற்றச்சாட்டுகள் எல்லாம் முதல்வராக அரியணையில் அமர்ந்த பிறகு தலைகீழாக மாற்றம் அடைந்திருப்பது தான் தமிழ்நாடு மக்களிடத்தில் நேற்று நேரலையில் பார்த்த அனைத்து உலகத் தமிழர்களுக்கும் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது
இந்த அச்சத்தை வருகின்ற காலங்களில் அகற்றுவதற்கு முன் வருவாரா, முதலமைச்சர் விஜய் இல்லை நடக்கின்ற குற்ற சம்பவங்களை பார்த்து கைகட்டி வேடிக்கை பார்ப்பதோடு அதற்கு அரசு மட்டும் பொறுப்பல்ல தட்டிக் கழித்து எப்போதும் போல இந்த நிலை அதிக அளவில் குற்ற சம்பவங்களை நடைபெறுவதை எப்படி ஏற்றுக்கொள்ளப் போகிறார் என்பது நமக்கு புரியாத புதிராக உள்ளது
ஆகவே உள்துறை கையில் வைத்துள்ள முதல்வர் அவர்கள் நேற்றைய தினம் சட்டசபையில் காட்டிய அதிரடி காட்டிலும், சட்ட ஒழுங்குகளும் காப்பாற்ற அதிரடியை இரும்பு கரம் கொண்டு முன்வர வேண்டும் என்பதுதான் மக்கள் மீது அக்கறையோடு கருத்தை முதலமைச்சருக்கு கவனத்திற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் வழிநின்று எடுத்து வைக்கின்றோம். கவனத்தில் எடுத்துக் கொள்வாரா பொறுத்திருந்து பார்ப்போம்.
அம்மா அவர்கள் அமைதி வளம் வளர்ச்சி என்று கூறுவார். எந்த ஒரு நாடு அமைதியாக நாடாக இருந்தால்தான் அங்கு தான் வளர்ச்சி இருக்கும் அங்கு தான் வளம் இருக்கும் அப்படித்தான் அம்மா அவர்களும் அம்மாவின் மறுபடியும் எடப்பாடிரும் ஆட்சி செய்தார்கள் ஆனால் இன்றைக்கு 120 நாட்களில் தமிழகத்தின் அமைதி கேள்விக்குறியாக உள்ளது
தலைநகரில் நேற்று உள்துறை மானிய கோரிக்கை போதே தவெக கட்சியை சேர்ந்த ஒருவர் பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்யப்படுவது கூட அவர் உரிய விளக்கம் கொடுக்க முன்வரவில்லை என்று சொன்னால் முழுவதுமாக முதல்வர் தனது பொறுப்பை தட்டிக் கழிக்கிறார் என்பதுதான் பதில் புரிந்து கொள்ள முடிகிறது எங்கே போகிறது தமிழகம் பொறுத்திருந்து பார்ப்போம்
இதையும் படிங்க: “சட்டமன்றம் ஜால்ரா மன்றமாகிவிட்டது...” - மதுரை மண்ணில் நின்று விஜய் அரசை விளாசித் தள்ளிய ஆர்.பி.உதயகுமார்...!