அரசியல் அநாகரிகத்தை அரங்கேற்றி வரும் விஜய்க்கு இரண்டு தொகுதிகளில் இரட்டை இலையை வெற்றி பெறச் செய்து அரசியல் பாடத்தில் மக்கள் புரிய வைப்பார்கள் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடும் தாக்கு
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வென்று, தனிப்பெருமை கட்சியாக இருந்த தவெக கட்சி ஆட்சி அமைப்பதற்கு தடுமாறிக் கொண்டிருந்த நேரத்தில் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன், ஆட்சியை அமைத்திருந்தாலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் 25 பேர்கள் ஆதரவோடு, பெரும்பான்மையை நிரூபித்த தவெக கட்சி, அதற்குப் பிறகு அதிமுகவை அபகரிக்கின்ற வகையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 6 பேர் சட்டமன்ற ஒரு கூட்டத் தொடரிலும் கலந்து கொள்ளாமல், வாக்களித்த விரல்மை காயும் முன்னே, தங்களின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்கள்
ராஜினாமா கடிதத்தை கீழ்த்தளத்தில் பேரவைத் தலைவரிடம் கொடுத்தவுடன், மேல் தளத்தில் அமைச்சர்களை சந்தித்து, தங்களை அதிரடியாக தவெகவில் இணைத்துக் கொண்ட அந்த காட்சிகளை, இதுவரை தமிழக அரசியல் வரலாற்றிலே யாரும் கண்டதில்லை, பார்த்ததில்லை.
இதையும் படிங்க: சி.எம்.விஜய் லண்டன் பயணம்... கை கொடுக்குமா? காலை வாரிவிடுமா? - நேரம் பார்த்து சீண்டிய ஆர்.பி.உதயகுமார்... !
தற்போது நடைபெறுகின்ற இடைத்தேர்தலில், அதிமுகவில் இரட்டை இலையில் வெற்றி பெற்று, தங்களின் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, பதவி ஆசைக்காக தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கிற மரகதம் குமரவேல், மதுராந்தகம் தொகுதியிலும், சத்தியபாமா, தாராபுரம் தொகுதியிலும், தவெக வேட்பாளராக, முதல்வர் விஜய் நேற்றைய தினம் அறிவித்து, அரசியல் ஆச்சரியத்தை அரங்கேற்றி இருக்கிறார்
. இது அரசியல் அநாகரிகமாக பார்க்கப்படுகிறது. அப்பட்டமாக அதிமுகவை அபகரிக்க, அழிக்க நினைக்கின்ற முதல்வர் விஜய்யின் கொடூர எண்ணம், பட்டவர்த்தமாக
இந்த அறிவிப்பின் மூலம் வெளியாகி இருப்பது, தமிழக மக்கள் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.
அல்லு, சில்லு தூர்ந்து போன கட்சி என்றெல்லாம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தொடங்கிய கட்சியை, அம்மா வளர்த்தெடுத்த கட்சியை, எடப்பாடியார் என்கிற சாமானியர் கட்டிக்காத்து வருகிற கட்சியை, வாய் கூசாமல் விமர்சனம் செய்து வருகிற முதல்வர் விஜய், தன்னுடைய வசீகரத்தின் வளையத்தில் வீழ்ந்து கிடக்கின்ற 35 சதவீத வாக்காளர்களை வைத்து தான், விஜய் இந்த ஆணவப் போக்கை நடத்துகிறார் என்பது நாடறிந்த உண்மை.
தவெக கட்சியை மாநில அந்தஸ்து பெற்றிருக்கிறது. தவெக கட்சியை மாநில அளவிலே அல்லது தேசிய அளவிலே கூட, வளர்ப்பதற்கு முதல்வர் விஜய்க்கு முழு உரிமை இருக்கிறது. ஆனால் 54 ஆண்டுகளில் 31 ஆண்டுகள் ஆண்ட ஏழை எளியவர்களுக்கான சாமானியர்களுக்கான கட்சியை, கருவரை முதல் கல்லறை வரை ஒவ்வொரு மனிதனின் வாழ்வில், முன்னேற்றத்தில் இரண்டற கலந்திருக்கின்ற மாபெரும் மக்கள் இயக்கமான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மக்கள் சேவையையும், மக்களுடைய பணியையும், குதிரை பேரம் நடத்தி, முடக்க நினைக்கின்ற அரசியல் அநாகரிகத்தை, நாம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
தமிழக மக்களே, இது சிந்திக்க வேண்டிய நேரம். நாம் மிகவும் எச்சரிக்கையாக இதை எதிர்கொள்ள வேண்டிய நேரம் என்பதை நீங்கள் புரிந்திருப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு, ஒரு அப்பராணி தலைவர், ஒரு இன்னோசென்ட் தலைவர், நம்ம விஜய் என்று ஒரு மாய பிம்பத்தை இன்றைக்கு சமூக வலைதளங்கள் மூலமாக கட்டமைத்துள்ள தவெக தலைவர் விஜயின் அரசியல் நடவடிக்கைகளை, செயல் எல்லாம் மக்கள் வெறுக்கத்தக்க வகையில், ஒரு அரசியல் அநாகரிகத்தின் உச்சமாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்குகின்ற வகையில் அமைந்திருக்குமானால், அதை தமிழ்நாட்டு மக்கள் ஒரு நாளும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
தமிழ்நாட்டு மக்கள் ஒரு நாளும் அதை அனுமதிக்க மாட்டார்கள். ஒரு நாளும் தமிழ்நாட்டு மக்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை கைவிடமாட்டார்கள். இதற்கு தகுந்த பாடம் எடுக்கத்தான், இந்த இடைத்தேர்தலில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில், நம்முடைய வாக்காளர்கள் எடப்பாடியார் அவர்கள், நம்பிக்கையோடு அறிவித்திருக்கிற கணிதா சம்பத், பானுமதி ஆகியோருக்கு புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் வெற்றிச் சின்னமான இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து, வெற்றி பெறச் செய்து, அரசியல் பாடத்தை விஜய்க்கு புரிய வைப்பீர்கள் என்கிற நம்பிக்கை ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் இருக்கிறது.
ஒட்டுமொத்த தமிழகத்தின் தன்மானத்தின் அடையாளமாக, இந்த மதுராந்தகம் தொகுதி வாக்காளர்களும், தாராபுரம் தொகுதி வாக்காளர்களும், இன்றைக்கு தயாராக இருக்கிறார்கள். இரட்டை இலைக்கு ஆதரவாக தீர்ப்பு எழுதி, முதல்வர் விஜய்க்கு அரசியல் பாடத்தை புரிய வைக்க, சரியான சந்தர்ப்பம் நமக்கு கிடைத்திருக்கிறது.
ஆகவே, விஜயின் அரசியல் அறியாமைக்கு, முடிவுரை எழுத வேண்டும். மக்கள் பணிக்கான விஜய்யின் கவனத்தை, நாம் உறுதி செய்ய வேண்டும் என்று சொன்னால், இந்த இரண்டு தொகுதிகளிலும் எடப்பாடியார் தலைமையிலும் இரட்டை இலை வெல்ல வேண்டும். இல்லை என்று சொன்னால், மிகப்பெரிய அளவிலே இன்றைக்கு முதல்வர் விஜய் கட்டமைக்கிற அந்த மாய பிம்பத்தினுடைய ஆபத்தால் 50 ஆண்டுகள் தமிழகம் பின்னோக்கி செல்லக்கூடிய ஒரு சூழ்நிலையை நாம் எதிர்கொள்ள வேண்டி வரும்
இது ஏழை எளியவர்களுக்கான சாமானியர்களுக்கான கட்சி. இதை இன்றைக்கு கபிளீகரம் செய்ய தன்னுடைய ஆட்சி அதிகாரத்தை வைத்து, பதவி ஆசை கொடுத்து, அண்ணாதிமுகவை கபிளீகரம் செய்வோம் என்று, தூந்து போன கட்சி அல்லு சில்லு என்று இன்றைக்கு வாய் கூசாமல் பேசுகிற அந்த விமர்சனத்திற்கு, நாம் விடை கொடுக்க வேண்டிய நேரம் வந்திருக்கிறது.
எடப்பாடியாரின் தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிவாகை சூடியது அந்த தீர்ப்பு தான் ஒட்டுமொத்த தமிழனத்திற்கு பெருமை சேர்க்கிற தீர்ப்பாக அமையும் என கூறினார்.
இதையும் படிங்க: முந்திரிக்கொட்டைகள்... அந்த 3 தவெக அமைச்சர்களை விட்டு விளாசிய ஆர்.பி.உதயகுமார்...!