சட்டவிரோத கல்குவாரி குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தலை உட்பட பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திமுக MLA இந்த கல்குவாரியை நடத்தி வருவதாகவும், 50 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று தாக்கியதாகவும் கூறப்பட்டு உள்ளது.
கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்த கிருஷ்ணராயபுரம் பகுதியில் நடைபெறும், சட்டவிரோத கல்குவாரி கொள்ளைக் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கதிரவன், ஒளிப்பதிவாளர் செபாஸ்டின் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதல், கடும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி நடத்தும் சட்டவிரோத கனிமச் சுரண்டலை கேள்வி கேட்டதற்காக, ஊடகவியலாளர்களைக் கொலை செய்யும் நோக்கத்துடன் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள் என்று தெரிவித்தார். இந்த ரவுடிகள், முழுக்க முழுக்க திமுகவின் பாதுகாப்பிலேயே செயல்படுகிறார்கள் என்பது தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும் என்றும் திமுக அரசு, யாருக்காக ஆட்சி நடத்துகிறது., கடத்தல்காரர்களுக்கும், ரவுடிகளுக்குமா என கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: கடையேழு வள்ளல்னு நினைப்போ? தரமான உணவுக்கூட கொடுக்க முடியலையா? அண்ணாமலை ஆவேசம்..!
ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலுக்குப் பொறுப்பான அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் சட்டவிரோத கல்குவாரி கொள்ளைக்குப் பின்னால் உள்ள அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: நாட்டு நடப்பு தெரியாம பேசுறீங்களே ஸ்டாலின்..! முதல்வரை கிழித்து தொங்கவிட்ட அண்ணாமலை..!