• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஆத்தாடி..!! இனி அரிசி விலை கிலோ ரூ.100-யை தாண்டுமாம்... இல்லத்தரசிகள் தலையில் இடியை இறக்கிய வியாபாரிகள்... காரணம் என்ன?

    நெல் வரத்து குறைவு, அரிசி ஆலைகள் மூடல் மற்றும் வெளிமாநில அரிசியைச் சார்ந்திருக்கும் நிலை உள்ளிட்ட காரணங்களால், தமிழ்நாட்டில் அரிசி விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
    Author By Amaravathi Sat, 10 Oct 2026 13:56:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rice price going to increase sky high

    தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக அரிசி விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. ஒரு மூட்டை அரிசியின் விலை ரூ.300 முதல் ரூ.600 வரை அதிகரித்துள்ளதாகவும், கடந்த 46 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அரிசி விலை உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், மேட்டூர் அணையிலிருந்து போதிய நீர்வரத்து இல்லாததாலும், மழைப்பொழிவு குறைந்ததாலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆற்றுப் பாசனத்தை நம்பியிருந்த விவசாயிகளால் நெல் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் விவசாய நிலங்கள் தரிசாகக் காணப்படுகின்றன.

    நெல் வரத்து குறைவு:

    நெல் சாகுபடி குறைந்துள்ளதால், தமிழ்நாட்டில் உள்ள அரிசி ஆலைகளுக்கான நெல் வரத்தும் குறைந்துள்ளது. இதன் காரணமாக, ஏற்கெனவே செயல்பட்டு வந்த பல அரிசி ஆலைகள் மூடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: தீபாவளி செலவுக்கு நடுவே அதிர்ச்சி.. அரிசி விலை கிலோ ரூ.100-ஐ தாண்ட வாய்ப்பா..?? திணறும் குடும்ப பட்ஜெட்..!!

    தமிழ்நாட்டில் ஒரு லட்சம் அரிசி ஆலைகள் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது சுமார் 25,000 ஆலைகள் மட்டுமே இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் அரிசி ஆலைகளை நம்பியுள்ள தொழிலாளர்களும் வேலைவாய்ப்பைப் பாதிக்கும் சூழலை எதிர்கொண்டுள்ளனர்.

    இதுகுறித்து அரிசி ஆலை உரிமையாளர் ஒருவர் கூறுகையில், “எங்கள் ஆலையில் முன்பு 25 தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். தற்போது ஆலையைத் தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், எட்டு தொழிலாளர்களை மட்டுமே வைத்துள்ளோம். இதேபோல், தமிழ்நாட்டில் ஒரு லட்சம் ஆலைகள் இருந்த நிலையில், தற்போது சுமார் 25,000 ஆலைகள் மட்டுமே இயங்குகின்றன. இதற்கு விவசாயம் பாதிக்கப்பட்டதே முக்கியக் காரணம்.

    மழை பெய்து, நெல் விளைச்சல் முழுமையாகக் கிடைத்தால் அரிசி விலை குறைய வாய்ப்புள்ளது. தற்போதைய விலை உயர்வு தற்காலிகமானதுதான். இதே விலை எப்போதும் நீடிக்காது. விலை குறைவதற்கான வாய்ப்பு உள்ளது. அது இயற்கையின் கையில்தான் இருக்கிறது” என்றார்.

    வெளிமாநிலத்தை நம்பியிருக்கும் தமிழகம்:

    தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அரிசித் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக வெளிமாநிலங்களில் இருந்து வரும் அரிசியைச் சார்ந்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உள்நாட்டில் நெல் உற்பத்தி குறைந்து, அரிசி ஆலைகளின் செயல்பாடும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வெளிமாநில அரிசியை அதிகம் சார்ந்திருப்பதும் விலை உயர்வுக்கான காரணங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது.

    இதனால் அரிசி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாகப் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

    திண்டாடும் கூலித்தொழிலாளர்கள்:

    அரிசி விலை உயர்வால் அன்றாடக் கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏழை, எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதே சவாலாக மாறியுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து கூலித் தொழிலாளி ஒருவர் கூறுகையில், “நான் கூலி வேலை செய்கிறேன். ஒரு நாளைக்கு ரூ.500 சம்பளம் கிடைக்கிறது. ஆரம்பத்தில் கிலோ அரிசி ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது ரூ.70 முதல் ரூ.80 வரை விற்கப்படுகிறது. இந்த ரூ.500 சம்பளத்தை வைத்துக்கொண்டு குழந்தைகளுக்கும் மனைவிக்கும் உணவளிப்பது மிகவும் சிரமமாக இருக்கிறது. அரசு விலைவாசியைக் கட்டுப்படுத்தி, அரிசி விலையைக் குறைத்தால் எங்களுக்கு வசதியாக இருக்கும்” என்றார்.

    பொதுமக்கள் கோரிக்கை: 

    தமிழ்நாட்டில் அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்த, விவசாயிகளுக்கு நெல் சாகுபடி செய்வதற்கான பயிற்சிகளை வழங்கி, உள்நாட்டு நெல் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

    மேலும், தமிழ்நாட்டில் விளையும் நெல்லிலிருந்து தயாரிக்கப்படும் அரிசியைப் பொதுமக்கள் வாங்குவதற்கு ஊக்கமளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. நெல் உற்பத்தி அதிகரித்து, அரிசி ஆலைகள் மீண்டும் முழுமையாகச் செயல்படத் தொடங்கினால், அரிசி விலை குறைவதற்கான வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    எனவே, விவசாய உற்பத்தியை அதிகரிப்பதுடன், அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் அத்தியாவசிய உணவுத் தேவையைப் பாதுகாக்கவும் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    இதையும் படிங்க: "ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது..” - ஆதிச்சநல்லூரில் அரங்கேறிய அவலம்... விடிந்ததுமே வெகுண்டெழுந்த தங்கம் தென்னரசு...!

    மேலும் படிங்க
    மது குடிக்கப் பணம் தர மறுத்த மனைவி கொலை! காப்பாற்ற வந்த மகளுக்கு,ம் கத்திக்குத்து! கணவருக்கு ஆயுள் தண்டனை!

    மது குடிக்கப் பணம் தர மறுத்த மனைவி கொலை! காப்பாற்ற வந்த மகளுக்கு,ம் கத்திக்குத்து! கணவருக்கு ஆயுள் தண்டனை!

    குற்றம்
    "வெளங்கிடும்"..! தோற்றாலும் வெற்றியா.? ஸ்டாலினை கிண்டலடித்த மாணிக்கம் தாகூர்..!!

    "வெளங்கிடும்"..! தோற்றாலும் வெற்றியா.? ஸ்டாலினை கிண்டலடித்த மாணிக்கம் தாகூர்..!!

    தமிழ்நாடு
    ராகுல் இந்தியாவை விட்டு வெளியேறினால் போதும்! அச்சுறுத்தல் இருக்காது! நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு!

    ராகுல் இந்தியாவை விட்டு வெளியேறினால் போதும்! அச்சுறுத்தல் இருக்காது! நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு!

    அரசியல்
    டெல்லியில் அறிவிக்கப்படாத அவசரநிலை... மத்திய அரசுக்கு கனிமொழி கண்டனம்..!!

    டெல்லியில் அறிவிக்கப்படாத அவசரநிலை... மத்திய அரசுக்கு கனிமொழி கண்டனம்..!!

    தமிழ்நாடு
    டெல்லி போராட்டத்தை முடக்கும் முயற்சி..! கடும் எதிர்ப்பு.. சுப்ரீம் கோர்ட் நாடிய சம்பவம்..!

    டெல்லி போராட்டத்தை முடக்கும் முயற்சி..! கடும் எதிர்ப்பு.. சுப்ரீம் கோர்ட் நாடிய சம்பவம்..!

    இந்தியா
    தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம்! மம்தா பானர்ஜியுடன் மேலும் 5 பேர் கைது? டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு!

    தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம்! மம்தா பானர்ஜியுடன் மேலும் 5 பேர் கைது? டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share