வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு ›

ராபர்ட் ப்ரூஸ் வெற்றியை எதிர்த்த வழக்கு… குறுக்கு விசாரணைக்கு ஆஜரான நயினார் நாகேந்திரன்!

நெல்லை எம் பி ராபர்ட் ப்ரூஸ் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் குறுக்கு விசாரணைக்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் நயினார் நாகேந்திரன் ஆஜரானார்.

ராபர்ட் ப்ரூஸ் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். 2024 தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் வெற்றி பெற்று, தமிழ்நாட்டில் காங்கிரஸ்-திமுக கூட்டணியின் வலுவான பிரதிநிதியாக உருவெடுத்தார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் நெல்லை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் 5,02,296 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தற்போதைய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் 3,36,676 வாக்குகள் பெற்றார்.

ராபர்ட் ப்ரூஸ், நயினார் நாகேந்திரனை 1,65,620 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த நிலையில் நெல்லை மக்களவைத் தொகுதியில் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் வெற்றி பெற்றார். இவரது வெற்றியை எதிர்த்து, பாஜக மாநிலத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு, ராபர்ட் ப்ரூஸ் தனது பிரமாணப் பத்திரத்தில் சொத்து விவரங்களை மறைத்ததாகவும், தேர்தல் விதிமுறைகளை மீறியதாகவும் குற்றம் சாட்டுகிறது.2025 ஜூன் 19 மற்றும் ஜூன் 26 ஆகிய தேதிகளில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜராகி, ராபர்ட் ப்ரூஸின் சொத்து மற்றும் வழக்கு தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இந்த நிலையில் ராபர்ட் ப்ரூஸ் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் குறுக்கு விசாரணைக்காக தமிழக பாஜக தலைவர் நையினார் நாகேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் ஆகினார்.

இதையும் படிங்க: சோறு கூட போடுறோம் ஓட்டு போட மாட்டோம்.. பாஜக தொண்டர் பேச்சால் அதிர்ந்து போன நயினார்!

இதையும் படிங்க: நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் மறைவு.. நயினார் நாகேந்திரன் இரங்கல்..!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள் ›

தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी