திருமா பற்றி அவதூறாக பேசுவாயா எனக் கூறி நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளரான புரட்சித் தமிழகம் கட்சி தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல் நடத்தியதுடன் செருப்புகளை கழற்றி அவர் மீது வீசியும் உள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல் நடத்திய நபர்கள் நம்பர் பிளேட் இல்லாத பைக்கில் தப்பிச் சென்றனர்.
ஏர்போர்ட் மூர்த்தி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குநர் அலுவலக வாசலியே நடைபெற்ற இத்தாக்குதல், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிவிற்கான மற்றுமொரு சான்று என்றார். ஏர்ப்போர்ட் மூர்த்தி மீதான தாக்குதலை தடுக்காது அங்குள்ள காவலர்கள் வேடிக்கைப் பார்த்தனர் என்பது கொடுமையின் உச்சம் எனவும் இதன்மூலம் காவல்துறை கலவரம் நடைபெறுவதையும், சட்டம் ஒழுங்கு சீர்குலைவதையும் விரும்புகிறதா., அதற்கு துணைபோகிறதா என்ற கேள்வியும் எழுகிறது என தெரிவித்தார்.

கருத்தினை கருத்தால் எதிர்கொள்ள துணிவற்ற கோழைகளாலேயே இக்கொடுந் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது என்றும் விமர்சனங்களை எதிர்கொள்ள துணிவற்று வன்முறைத்தாக்குதல் தொடுப்பதுதான் அரசியல் அறமா எனவும் கேட்டார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை முதல் நேற்றைக்கு ஆடுதுறையில் பாமக மாநில நிர்வாகி ஐயா ம.க.ஸ்டாலின் மீது வெடிகுண்டு வீசி கொலைவெறித் தாக்குதல் நடைபெற்றதுவரை தமிழ்நாட்டில் மக்கள் பணியாற்றும் அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பில்லாத கொடுஞ்சூழல்
இதையும் படிங்க: இவ்ளோ தைரியம் எப்படி வருது? ம. க. ஸ்டாலின் மீதான கொலை முயற்சிக்கு சீமான் கண்டனம்
நிலவுகிறது என்றும் அதன் உச்சமாக இன்றைக்கு தமிழ்நாடு காவல்துறையின் அதி உயர் அலுவலக வாசலில், காவல்துறையினர் கண் முன்னேயே புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது கொடுந்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். ஏர்ப்போர்ட் மூர்த்தி மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தியவர்களை விரைந்து கைது செய்து கடும் தண்டனைப் பெற்றுத்தர வேண்டுமென வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: அந்த நாய் வந்ததால் இந்த நாய் வேண்டாம போச்சா? - ஆவேசத்தை கொட்டித்தீர்த்த சீமான்...!