தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு, வீடு வீடாக வாக்கு சேகரிப்பு, தெரு முனை கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் என பல்வேறு வடிவங்களில் அரசியல் கட்சிகள் சார்பில் பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது. பல தொகுதிகளில் வேட்பாளர்கள் தங்கள் கட்சித் தொண்டர்களுடன் சேர்ந்து வாக்காளர்களை நேரடியாக சந்தித்து, “ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள், தலைமுறைக்கும் மாற்றம் வரும்” என்ற முழக்கத்துடன் மக்களிடம் சென்று கொண்டிருக்கின்றனர்.
தமிழகத்தில் தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களம் இறக்கியது. சீமான் ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். திமுக உல்லட்ட கட்சிகள் தொடர்பாகவும் மக்கள் பிரச்சனைகள் தொடர்பாகவும் சீமான் எடுத்துரைத்து வருகிறார்.

வாய்ப்பு கொடுத்தால் தமிழகத்தை நிச்சயம் நல்ல நிலைமைக்கு மாற்றுவோம் என்பதை எடுத்துக் கூறி வருகின்றன. நாம் தமிழர் கட்சி காரைக்குடி தொகுதியில் வேட்பாளராக சீமான் களமிறங்கி இருக்கிறார். காரைக்குடி தொகுதியில் சீமான் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இன்றுடன் தேர்தல் பிரச்சாரங்கள் ஓய்வு நிலையில் வாக்கு சேகரிப்பு இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.
இதையும் படிங்க: காரைக்குடியில் சீமான் ரோடு ஷோ..! தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..!!
இதனிடையே, காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் காரைக்குடி வேட்பாளருமான சீமான் ரோடு ஷோ நடத்தினார். இதைத்தொடர்ந்து உடையில் நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில் சீமான் கலந்து கொண்டார். விவசாயி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க: நடைப்பயிற்சி மேற்கொண்டு காரைக்குடியில் சீமான் வாக்கு சேகரிப்பு..! கார்த்தி சிதம்பரம் எம்.பி.யை தவிர்த்த சீமான்..!