மொழிப்போர் தியாகிகள் தினம் தமிழ்நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமானதும், உணர்ச்சி நிறைந்ததுமான நினைவு நாளாகும். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25 அன்று இந்த தினம் மாநிலம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள், தமிழ் மொழியைப் பாதுகாக்கவும், இந்தி மொழியை கட்டாயமாகத் திணிக்க முயன்ற மத்திய அரசின் கொள்கைக்கு எதிராகவும் தங்கள் உயிரைத் தியாகம் செய்தவர்களை நினைவுகூரும் நாளாகும்.
இந்தி மொழியை அதிகாரப்பூர்வ மொழியாக முழுமையாக அமல்படுத்துவது என்ற முடிவு அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. திமுக, திராவிடர் கழகம், மாணவர் அமைப்புகள், பொதுமக்கள் என அனைவரும் தெருவுக்கு இறங்கினர். ரயில்கள் தீவைப்பு, அரசு அலுவலகங்கள் மீது தாக்குதல், பதாகைகள் எரிப்பு போன்ற போராட்டங்கள் தீவிரமடைந்தன. குறிப்பாக ஜனவரி 25 அன்று போராட்டங்கள் உச்சக்கட்டத்தை எட்டின. அப்போது, தியாகிகளில் பலர் தீக்குளித்து உயிரிழந்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் நினைவு கூறப்படுகிறது. மொழிப்போர் தியாகிகளுக்கு சீமான் வீரவணக்கம் செலுத்தியுள்ளார். தாய்மொழிக்காக தன் உயிரை இழக்கத் துணிந்த கூட்டம் உலக வரலாற்றில் தமிழர்களைப் போல எவரும் இல்லை என்கிற தனித்த வரலாற்றுப்பெருமை நம் இனத்திற்குண்டு என தெரிவித்தார். ஆனாலும், இந்நொடி வரை நம் உயிருக்கு நிகரான தமிழ் மொழி அரச மொழியாகவோ, அதிகார மொழியாகவோ, நீதிமன்ற மொழியாகவோ, வழிபாட்டு மொழியாகவோ மாறுவதற்கு இன்னும் நாம் போராடிக்கொண்டிருக்கிறோம் என்றும் ‘எங்கும் தமிழ்., எதிலும் தமிழ் என சொல்லி ஆட்சிக்கு வந்த திராவிட ஆட்சியாளர்கள் எங்கேயும் இல்லை தமிழ் என்ற நிலையை உருவாக்கிவிட்டார்கள் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரேஷன் அரிசியை அமைச்சர்கள் சாப்பிடுவாங்களா? நான் பூமிக்கான தலைவன்... சீமான் திட்டவட்டம்...!
தமிழ்நாட்டில் உள்ள வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் இல்லை., ஆவின் பால் முதல் அரசின் ஆணைகள் வரை தமிங்கல விளம்பரங்கள்., குழந்தைகளுக்கு நல்ல தமிழ்ப்பெயர்கள் சூட்டுவது குறைந்துவிட்டது எனவும் கூறினார். தாய்மொழி வழிக் கல்வியை திராவிட மாடல் அரசு சிதைத்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்
இதையும் படிங்க: அதிமுகவில் காளியம்மாள்? தமிழ்தேசியம் TO திராவிடம்..! அரசியலில் திருப்புமுனை..!