தமிழகத்தில் திமுக ஆட்சியின் கீழ் நடைபெறும் பொது வழங்கல் திட்டத்தின் மூலம் மக்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசியின் தரம் குறைவாக உள்ளது என்ற குற்றச்சாட்டை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பலமுறை வலியுறுத்தி வந்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டு அவரது அரசியல் பிரச்சாரங்களிலும், அறிக்கைகளிலும், பொது கூட்டங்களிலும் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.
சீமான் அவர்களின் கருத்துப்படி, தமிழக அரசு "இலவச அரிசி" என்ற பெயரில் வழங்கும் அரிசி பல ஆண்டுகளாக தரமற்றதாகவும், கலப்படம் கொண்டதாகவும் உள்ளது. இது உண்ண முடியாத அளவுக்கு தாழ்ந்த தரத்தில் இருப்பதாகவும், ஏழை மக்களின் உணவு உரிமையுடன் விளையாடுவதாகவும் அவர் தொடர்ந்து விமர்சிக்கிறார். குறிப்பாக திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இந்தப் பிரச்சினை மேலும் தீவிரமடைந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டுகிறார்.

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அரசு இலவசமாக வழங்கும் ரேஷன் அரிசியை அமைச்சர்கள் சாப்பிடுவார்களா என்று கேள்வி எழுப்பினார். ஒரே நெல், ஒரே அரிசி., ஆனால் எப்படி தரம் குறைகிறது என்று கேட்டுள்ளார். 60 ஆண்டுகளாகயும் தலைநகரில் மழை, வெள்ளம் வடிய ஏற்பாடு செய்யவில்லை என்ற குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: பரபரப்பான அரசியல் களம்..! யார் யார் வேட்பாளர்கள்? 5வது நாளாக EPS நேர்காணல்..!
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை என்றும் பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்தான் எனவும் சீமான் தெரிவித்தார். பரந்தூரில் விமான நிலையம் கட்ட வேண்டும் என்பது பேராசை என்று சீமான் விமர்சித்துள்ளார். மரங்களும் பறவைகளும் இயற்கையும் மனிதன் இல்லாமல் வாழும் ஆனால் இவையில்லாமல் மனிதன் வாழ முடியாது என்ற சீமான் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் சம்பவங்கள் குறைவு…! குற்றச்சாட்டுகளுக்கு பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பதிலடி..!