திருமாவளவன், நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரை கடுமையாக விமர்சித்தார். "விஜய்யும் சீமானும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்" என்று கூறி, அவர்களது அரசியல் நடவடிக்கைகள் திராவிட இயக்கத்தையும் திமுகவையும் பலவீனப்படுத்துவதற்காக பாஜகவின் திட்டத்தின் ஒரு பகுதி என்று குற்றம் சாட்டினார். பீகார், உத்தரப்பிரதேசத்தில் பாஜகவின் தந்திரங்கள் பலிக்கலாம், ஆனால் தமிழ்நாட்டில் அது ஒருபோதும் வெற்றி பெறாது. பாஜக எந்த வடிவத்தில் வந்தாலும் தமிழகத்தில் நுழைய முடியாது" என்று உறுதியாக தெரிவித்தார்.
இந்த சூழலில்தான் விஜய் மற்றும் சீமான் மீதான விமர்சனம் வந்தது. திருமாவளவன் கூறினார். விஜய் திமுகவை 'தீய சக்தி' என்று கூறுகிறார். அவரது கட்சி தொடங்கியது திமுகவை வீழ்த்தவே. சீமான் தமிழ்த் தேசியம் பேசுவதாக கூறிக்கொண்டு இந்து தேசியத்தை பரப்புகிறார். இவர்கள் இருவரும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவால் உருவாக்கப்பட்டவர்கள் என்பது இப்போது அம்பலமாகிவிட்டது. பெரியார், அம்பேத்கர் கோட்பாடுகளை அழிக்கவே இவர்களது அரசியல். மேலும் திமுகவை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி, திமுக என்னை கூட்டணியிலிருந்து நீக்கினாலும் கவலையில்லை, ஆனால் திராவிட இயக்கத்தை காக்க வேண்டும் என்று கூறினார்.
விஜயும், சீமானும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பெற்றெடுத்த பிள்ளைகள் என திருமாவளவன் பேசியதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலடி கொடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை சீமான் திறந்து வைத்தார். தொடர்ந்து சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது திருமாவளவனுக்கு பதில் கொடுத்தார். பாஜக தன்னையும் விஜய்யும் பெற்றெடுக்கும் போது அருகில் இருந்து திருமாவளவன் தான் பிரசவம் பார்த்தார் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: அரசு பேருந்துகளில் "தமிழ்நாடு" ஸ்டிக்கர்... நாம் தமிழர் கட்சியினர் அதிரடி கைது...!
நான் யார் என்பதை தன்னிடம் தான் கேட்க வேண்டும் என்றோம் காலம் காலமாக தன்னை போலி தமிழ் தேசியவாதி என்று தான் கூறி தான் வருவதாக தெரிவித்தார். அவர் சொன்னால் உண்மையாகி விடுமா என்றோம் ஆர்எஸ்எஸ் கைகூலி என்பார்கள் கிறிஸ்தவ கைக்கூலி என்பார்கள் இதையெல்லாம் நான் கேட்டுக் கொள்ள முடியுமா என்று தெரிவித்தார். அண்ணன் தானே பேசுகிறார் பேசட்டும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 100 நாள் வேலை திட்டத்தையே நாங்க ஏற்கல... பல்லாங்குழியும், தாயக்கட்டையும் தான் நடக்குது... சீமான் விமர்சனம்...!