முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான மூன்று வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை வந்தது. அதிமுக ஆட்சியில், 2011- - 15ம் ஆண்டு போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்தார். அப்போது பணி நியமனங்களுக்காக பணம் பெற்று மோசடி செய்ததாக, அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் உள்பட 40க்கும் மேற்பட்டோருக்கு எதிராக, 2015ல் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு கைது செய்து சிறையில் அடைத்தது. செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. 15 மாத சிறைவாசத்துக்கு ம் சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து மீண்டும் அமைச்சரானார். ஆனால் அவர் அமைச்சரானதை உச்சநீதிமன்றம் கண்டித்தது. அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையெனில் ஜாமீன் ரத்து செய்ய உத்தரவிடுவோம் என்று கூறியது. இதையடுத்து செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை கடந்த ஏப்ரல் 27ல் ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் நிபந்தனைகளில் தளர்வு கோரி மூன்று மனுக்கள் விசாரணைக்கு வந்தன. செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதிட்டார். அப்போது இந்த விவகாரத்தில் ஜாமீன் வழங்கிய போது அவர் அமைச்சராக இல்லை, செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துவிட்டார் என்ற காரணத்தின் அடிப்படையில் ஜாமீன் வழங்கவில்லை மாறாக வழக்கின் தன்மை குறித்தும் அதில் இருக்கக்கூடிய சாராம்சங்களை கருத்தில் கொண்டுதான் ஜாமீன் வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: செந்தில் பாலாஜி மேல ஏன் பழி போடுறீங்க? என்ன நடந்துச்சு பாத்தீங்களா... கே.எஸ் அழகிரி விளக்கம்!
அப்பொழுது குறுக்கிட்ட நீதிபதிகள் செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லை என்பது வழக்கு விசாரணையின் போது சுட்டிக்காட்டப்பட்டது. அதனை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது எனத் தெரிவித்தார். அப்போது செந்தில் பாலாஜி தரப்பில், அவர் அமைச்சராக இல்லை என்ற கருத்தை நோக்கினாலும், அது தொடர்பாக எந்த ஒரு வார்த்தையோ அல்லது கருத்தோ குறிப்பிடப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டது. செந்தில் பாலாஜி அமைச்சராக இருப்பதாக கருதப்படுமேயானால், அவரது ஜாமீன் மனுவை திரும்ப பெற நீதிமன்றத்திற்கு அதிகாரம் இருக்கிறது.
மேலும் செந்தில் பாலாஜி இந்தவழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறார். எந்த ஒரு சாட்சியங்களையும் ஆதாரங்களையும் அவர் கலைக்கவோ அல்லது அழுத்தம் கொடுக்க முற்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜாமீன் நிபந்தனைகளை அவர் கடைபிடித்து வருகிறார். எந்த வகையிலும் மீறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. அப்படி இருக்கையில் தற்பொழுது இருக்கும் கேள்வி என்னவென்றால் ஒரு வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது குற்றம் சாட்டப்பட்ட நபர் அமைச்சராக இருக்கக்கூடாது? என நீதிமன்றம் கூற முடியாது என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
மேலும் இதற்கு நீதிபதிகள் தரப்பில் தனது நிலைப்பாட்டை தெளிவாக வழக்கு விசாரணையின் போது தெரிவித்துள்ளதாகவும், இந்த விவகாரத்தில் எந்தவொரு மாற்றுக்கருத்தோ குழப்பமோ இருக்க முடியாது எனத் திட்டவட்டமாக தெரிவித்தனர். செந்தில் பாலாஜி அமைச்சராக விரும்பினால் அது தொடர்பாக மனுவை தாக்கல் செய்து இருக்கலாம். அவர் உரிய மனுவை SC யில் தாக்கல் செய்யலாம். அதன் அடிப்படையிலேயே முடிவு எடுக்கப்படும். நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தால் அதில் அனுமதி பெற்று அவர் அமைச்சராகலாம். ஆனால் அதற்கு முன் அவர் விதிகளை மீறக்கூடாது. ஜாமீன் விதிகளை மீறினால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
இதையும் படிங்க: பத்து ரூபா பாலாஜி… CBI வந்தா CONDITIONS FOLLOW பண்ணுவீங்களா? கிண்டலடித்த அதிமுக…!