ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. என். இளையராஜா சென்னை மாநகர காவல் ஆணையரிடம் அளித்த புகாரில், தன்னை ஒரு நபர் தொடர்பு கொண்டு பேரம் பேசியதாகக் கூறினார். பிறகு திருநாவுக்கரசு என அடையாளம் காணப்பட்டார். திருநாவுக்கரசு இளையராஜாவிடம், “முக்கிய கட்சியைச் சேர்ந்தவர்கள் உங்களிடம் பேசச் சொன்னார்கள்” என்று தொடங்கி, நம்பிக்கையில்லா தீர்மானத்தில் சபாநாயகருக்கு எதிராக வாக்களித்தால் அல்லது ராஜினாமா செய்தால் கோடிக்கணக்கில் பணம் தருவதாக பேரம் பேசியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டது.
இந்தப் பேரத்தில் ரூ.35 கோடி வரை வழங்கப்படும் எனக் கூறப்பட்டதாகவும், மிரட்டல் கலந்த முயற்சிகளும் இருந்ததாகவும் எம்.எல்.ஏ. தெரிவித்தார். போலீசார் உடனடியாக விசாரணையைத் தொடங்கினர். இந்த விவகாரத்தில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக கைதானவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் விசாரணை நடைபெற்று வருகிறது.

செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமார் ஆகியோருக்கு சம்மன் வழங்கப்பட்டது. செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. நேற்றைய தினம் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்ட நிலையில் வரவில்லை.
இதையும் படிங்க: அசோக்குமாரை குறிவைத்த அமலாக்கத்துறை..! "லுக் அவுட் நோட்டீஸ்"..! எதிர்மனுத் தாக்கல்..!
இதனை எடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலிஸ் தரப்பில் கூறப்பட்டது. இந்த நிலையில் ஆட்சி கவிழ்ப்பு சதி விவகாரத்தில் செந்தில் பாலாஜி முன் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன் ஜாமின் கேட்டு இருக்கிறார்.
இதையும் படிங்க: சம்மனை மதிக்காத செந்தில் பாலாஜி..? ஆஜராகாததால் புதிய சிக்கல்..! போலீசின் அடுத்த நகர்வு என்ன..?